தூத்துக்குடி,
ஜூலை, 1
தூத்துக்குடி.
பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 15.07.2025 அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பள்ளிச்சீருடைகள், ஸ்கூல் பேக் ஆகியவை தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சி, காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள பால்கனி நாடார் தோட்டத்தில் வைத்து வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அறுசுவை அசைவ விருந்து மெகா அன்னதானம் வழங்கப்படுகிறது.
மேலும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும் கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள்;, சமுதாய சொந்தங்கள், ஊர்பெரியவர்கள்;, மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் ஏ.லெட்சுமணன், மாநில பொருளாளர் எம்.எஸ்.டி.ரவிசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பல்வேறு தலைவர்களை நேரில் சந்தித்து காமராஜர் பிறந்த நாள் விழா அழைப்பிதழை வழங்கி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்ட மதிமுக பொருளாளரும் மாநில பொதுக்குழு உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான காசி மெட்டல்ஸ் உரிமையாளர் பிச்சைமணி நாடார், ஜெயபால் நாடார் ஆகியோரை நேரில் சந்தித்து பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழாவிற்கு வருகை தருமாறு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் நாடார் அழைப்பிதழ் வழங்கினார்.
கல்வி கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் 123-வது அவதார தின விழாவை தூத்துக்குடியில் பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் வெகு சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் அதன் நிறுவனத்தலைவர் எஸ்.பி.மாரியப்பன் தலைமையில் தூத்துக்குடியில் மெகா நலத்திட்ட உதவிகள், மெகா அன்னதானம், பள்ளி மாணவர்களுக்கு நோட்புத்தகம் வழங்குதல் உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்டங்களை சிறப்பாக செய்ய முன்னேற்பாடு பணிகள் மின்னல் வேகத்தில் செய்து வருகிறார்.