தூத்துக்குடி தெற்கு மண்டல சார்பில், பிஜேபி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் 42வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை மற்றும் திறமையான மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் முத்தையாபுரம் தங்கமாள்புரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பொட்டல்காடு பள்ளிகளில். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களின் முயற்சியை பாராட்டி அவர்களை மேலும் உயர்வுக்கு ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த உதவி வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி, அவர்களின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் சமூகத்தில் சிறந்த நிலையை அடைய வேண்டிய அவசியம் குறித்து உரையாற்றினாா்கள்.
நிகழ்ச்சியில் தெற்கு மண்டல தலைவர் மாதவன், மாவட்ட துணை தலைவர் மாசானம் மற்றும் பள்ளி ஆசாியா்கள் மாணவ மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு மாவட்ட தலைவர் சின்னதங்கம் செய்திருந்தார்.