தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டருக்கு தீபாவளி வாழ்த்து கடிதம் எழுதும் நிகழ்ச்சியும் தமிழ் செம்மல் விருது பெற்ற அன்பழகனுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது
தலைமை ஆசிரியர் கணகரத்தினமணி தலைமையில் பத்திரிகையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலையில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை வரவேற்புரையாற்றினார். விளையாட்டு ஆசிரியர் ஜீசஸ் ஆல்பன் தொகுத்து வழங்கினார்
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ் செம்மல் விருது பெற்ற அன்பழகனுக்கு பொன்னாடை அணிவித்து புத்தகங்கள் வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.
தொடர்ந்து மாவட்ட கலெக்டருக்கு தீபாவளி வாழ்த்து கடிதம் 10 11 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் வாழ்த்து கடிதம் எழுதினார்கள்
தமிழ் செம்மல் விருது பெற்ற அன்பழகனை பாராட்டி வாழ்த்து கவிதை வாசித்தார். நெடுஞ்சாலை கவிஞர் செல்வராஜ், பத்திரிகையாளா் மன்ற தலைவர் சண்முகசுந்தரம் காமராஜா் நற்பணி மன்ற மாவட்ட தலைவா் லாரன்ஸ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினார்கள். ஆசிரியர் பெருமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். தொடர்ந்து புத்தக வாசிப்பு மன்ற தலைவர் எழுத்தாளர் மாரிமுத்து நன்றியுரையாற்றினாா்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு மன்றத்தினர் செய்திருந்தனர்