தூத்துக்குடியில் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் தூத்துக்குடி நலக்குடில் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம், நேற்று 06/07/25 அன்று தூத்துக்குடி அண்ணா நகர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய வளாகத்தில் வைத்து காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த மாபெரும் இலவச மருத்துவ முகாமினை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத் தந்தை ரஞ்சித் குமார் ஜெபம் செய்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் தலைவர் திருமதி ஜெயந்தி ஹெலன், பாதர் பெஞ்சமின், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தங்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மருத்துவ முகாமில் வாத நோய், சர்க்கரை நோய், தோல் வியாதி, உயர் இரத்த அழுத்தம், உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அக்கு பஞ்சர் சிகிச்சை, மலர் மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், பிசியோ தரபி மருத்துவம், அரோமா சிகிச்சை வர்ம சிகிச்சை, விதை சிகிச்சை, உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்பில் பல்வேறு நோய்களுக்கு ஆலோசனைகள் மற்றும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முகாமில் பங்கேற்றவர்களுக்கு மருந்துகள் முற்றிலுமாக இலவசமாக வழங்கப்பட்டது. இந்த மாபெரும் மருத்துவ முகாமில் இயற்கை மருத்துவம் ஹீலர் ஜெகன், ஹோமியோபதி மருத்துவர் திருமதி டாக்டர் ஆதித்யா, பிசியோதரபி மருத்துவம் டாக்டர் மைக்கேல் ஜான் ஜெயகர் ஆகியோர் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். இந்த மாபெரும் இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.