![]()
திருச்செந்தூரில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், சுதேசி நாயகனும், வணிகர்களின் காவலருமான மறைந்த தா. வெள்ளையன் அவர்களின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.
TVD தினகரன் வெள்ளையன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.
மேலும், தா. வெள்ளையன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேற்கு மாவட்டத் தலைவர் SP மாரியப்பன், தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் ராஜன், வடக்கு மாவட்டத் தலைவர் எம். ரவி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் கே. மாரியப்பன், தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பி. முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களும், மாவட்டத் தலைவர்களும் திரளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
தா. வெள்ளையன் அவர்களின் வணிகர் நலப் பணிகளையும், சேவைகளையும் நினைவுகூரும் வகையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.