தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தற்போது துவங்கி உள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி செய்து வருகிறார்.
இந்நிலையில் துறைமுகம் பைபாஸ் ரோட்டில் காற்றாற்று வெள்ளம் வரும் பாதைகளை பார்வையிட்டு ஓடை தூர்வாரப்பட்டுள்ள பணிகளையும் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு சில உத்தரவை பிறப்பித்தார். அதன் பிறகு மீன்வளக்கல்லூரி அருகில் உள்ள ஓடையை பார்வையிட்டு அடைப்பு ஏதும் உள்ளதா என்று பார்வையிட்டார். அதன் பிறகு திருச்செந்தூர் உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் பார்வையிட்டார் அதன் பிறகு அதன் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் நின்று பாலத்தின் இருபுறமும் பெரும் வெள்ளம் வந்தால் மழைநீர் செல்லும் பாதைகளை பார்வையிட்டு ஒரு சில இடத்தில் மணல் திட்டுக்கள் இருந்தது அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அதன் பிறகு முள்ளக்காடு பகுதியில் மழை நீர் செல்லும் பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார் அப்போது ஒரு சில இடங்களில் மழை நீர் செல்லும் ஓடையில் தூர்வாரப்படாமல் இருந்தது உடனடியாக தூர்வாரப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார் அதன் பிறகு முத்தையாபுரத்தில் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார் அதன் பிறகு புதிய துறைமுக பகுதி வழியாக கோரம்பள்ளம் பகுதியில் இருந்து மழை வெள்ள நீர் வரும் பகுதிகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் அதன் பிறகு கோவில் பிள்ளை நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பம்பிங் ஸ்டேஷன் மற்றும் மோட்டார்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காலை முதல் மாலை வரை தெற்கு மண்டலத்துக்குட்பட்ட 15 வார்டுகளிலும் அதிகாரிகளுடன் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மழை நீர் செல்லும் ஓடை பகுதி மற்றும் பம்பிங் ஸ்டேஷன் மோட்டார் வைக்கப்பட்டுள்ள பகுதிகளை மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறுகையில்
தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் எனக்கு 2022ம் ஆண்டு வாய்ப்பு வழங்கினார் அதன்படி 2023ம் ஆண்டு பெரு வெள்ளத்தை சமாளித்தவன் நான் அதன்பிறகு 2024 மற்றும் 2025ம் ஆண்டு மழை வெள்ளத்தை எல்லாம் சரி செய்தவன் தூத்துக்குடி மாநகர் முன்பு எப்படி இருந்தது தற்போது எப்படி உள்ளது என்பது மக்களுக்கு நன்கு தெரியும் திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த வாய்ப்பை நான் மக்களுக்கு நல்ல முறையில் பயன்படுத்தி வருகிறேன் பொதுமக்களும் எனக்கும் முழு ஒத்துழைப்பு தருகிறார்கள் . இன்னும் மீதி உள்ள பதவி காலம் முழுவதும் என்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு பணி செய்ய முடியும் முத்தம்மாள் காலனி. பி என் டி காலனி ஆகிய பகுதிகளில் 2023ம் ஆண்டு பாதிக்கப்பட்டதை விட 2024ம் ஆண்டு குறைந்தது 2025ம் ஆண்டு அதைவிட மழை நீர் பாதிப்பு குறைந்தது 2026ம் ஆண்டு முன்பெல்லாம் ஒரு நாள் மழை நீர் தேங்கி இருந்தால் தற்போது ஆறு மணி நேரத்தில் மழை நீர் முழுவதும் சென்று விடும் அதற்கு தகுந்த போல் பணிகளை செய்துள்ளேன் தூத்துக்குடி மாநகரில் மழை வெள்ளநீர் செல்வதற்கு 14 வழித்தடங்கள் உள்ளது அந்த வழித்தடங்கள் முழுவதும் தற்போது தூர்வாரப்பட்டு உள்ளது அதுபோல மாநகரில் எந்த பகுதியிலாவது மழை நீர் தேங்கி விட்டால் மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்ற எண்ணத்தில் மின்மோட்டார்கள் தயாராக உள்ளது நான் 2022ம் ஆண்டு பதவியேற்பதற்கு முன்பு தூத்துக்குடி மாநகர் மக்கள் மழை வெள்ளத்தில் எப்படி பாதிக்கப்பட்டார்கள் தற்போது நான்கரை வருட காலத்தில் மக்கள் மழை வெள்ளகாலத்தில் பாதிக்க கூடாது என்று அதற்கு தகுந்தாற் போல் பணிகளை செய்து உள்ளேன் தற்போது 2026ம் ஆண்டு மழை வெள்ளத்தில் மக்கள் எந்த ஒரு பாதிப்பும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அதற்குத் தகுந்த போல் பணிகளை செய்து வருகிறேன் தினசரி ஒவ்வொரு மண்டலமாக ஒவ்வொரு வார்டாக சென்று ஓடைப் பகுதிகள் கழிவுநீர் செல்லும் கால்வாய் பகுதி மின்மோட்டார் அறை பம்பிங் ஸ்டேஷன் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன் என்று கூறினார்.
உடன் இளநிலை பொறியாளர் செல்வம், மாநகராட்சி சகாதாரகுழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலா் முத்துவேல், தெற்கு மண்டல மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் ஸ்டாலின் பாக்கியநாதன் வட்டச் செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர் ஜேஸ்பா் உள்பட பலா் உடனிருந்தனர்.