தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி கதிா்வேல் வௌியிட்டுள்ள அறிக்கையில் தலைமை தேர்தல் அலுவலரும் மத்திய பாஜக அரசின் பிரதம மந்திரி உள்துறை அமைச்சர் ஆகியோர்களின் கடந்த கால தேர்தல் முறைகேடுகளையும் எஸ்ஐஆர் பணிகள் மூலம் வாக்குரிமை மறுக்கப்பட்டு ஆளும் பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்ட பல்வேறு நிகழ்வுகளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மற்றும் இந்தியா கூட்டணியில் அனைத்து கட்சி நண்பர்களும் பல்வேறுபட்ட போராட்டங்களை நடத்தி தலைமை தேர்தல் அதிகாரியின் முறைகேட்டை சுட்டிக்காட்டி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பலமுறை மக்கள் வெளியிலும் நாடாளுமன்றத்திலும் சுட்டி காட்டினார்கள்.
இந்நிலையில் 2023 நடைபெற்ற தேர்தல் சீர்திருத்த சட்டம் என அடிப்படையில் சிறப்பு வாக்காளர் திருத்தம் முறைகேடுகளை கண்டித்து மத்திய தேர்தல்தலைமை ஆணையர் ஞானேனேஷ் குமார் தன்னிச்சையாக தங்களுக்கு தெரியாமல் தாங்கள் முறையிட்டும் தாங்கள் பலமுறை வலியுறுத்தியும் தன்னிச்சையாக எஸ் ஐ ஆர் திருத்தங்களை மேற்கொண்டதாகவும் பத்திரிகைகள் மூலம் உண்மை வெளிவந்துள்ளது. எனவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி உத்தரவுப்படி ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள அவர்கள் இயற்றிய சட்ட திருத்தங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும், அவருடைய ஜனநாயக அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஜனநாயகத்தை அரசியலமைப்புச் சாசனம் வழங்கிய அதிகாரத்தை மக்களுக்கு வழங்கிய உரிமைகளை சர்வாதிகாரமான முறையில் கூட்டுச் சதியில் ஈடுபட்டு மத்திய பாஜகவிற்கு துணை போன அவரை பதவி நீக்கம் செய்வதோடுகைது செய்து கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என்ற அடிப்படையிலேயும் அவர் காலத்தில் மேற்கொண்ட சர்வாதிகார நடவடிக்கைகளை மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும், என்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
28 9 2026 காலை 10 மணி அளவில் தூத்துக்குடி கலெக்டர் ஆபீஸ் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏக்கள் டேனியல் ராஜ் சுடலையாண்டி பங்கேற்கவுள்ளார்கள். அனைத்து காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகளும், மண்டல தலைவர்கள் அனைவரும், துணை அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி கதிா்வேல் கூறியுள்ளாா்.