தூத்துக்குடி கல்லூரி மாணவி ரத்ன ஸ்ரீ முத்துராஜ் எழுதிய ஆங்கில புத்தகம் 5 ஸ்டெப்ஸ் மதிப்புரை வழங்கும் நிகழ்ச்சிக்கு முனைவர் பெட்ரிசியா ஆங்கில பேராசிரியர் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்கள். ஓய்வு பெற்ற ஸ்பிக் ஊழியர் செல்வின் முன்னிலை வகித்தார். லாரன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
செயிண்ட் ஆன்ஸ் நர்ஸிங் கல்லூரி மாணவி அகஸ்டா திரோஸா, தூய மரியன்னைக் கல்லூரி மாணவி ஏஞ்சலின் ஆகியோர் மதிப்புரை வழங்கினார்கள். 5 ஸ்டெப்ஸ் புத்தக எழுத்தாளர் ரத்ன ஸ்ரீ முத்துராஜ் ஏற்புரை வழங்கினார். ஆசிரியர் ராஜ்குமார் நன்றியுரையாற்றினாா்.