தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் எல்லோருக்கும் தேவையான கட்டமைப்பு பணிகள் முழுமையாக நடைபெற்று வருகின்ற நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட புல்தோட்டம் பகுதியில் பொதுமக்களின் பங்களிப்போடு பயன்பாட்டிற்காக புதிய தெருவிளக்குகள் அமைக்கப்பட்டதையும் தனியாா் பங்களிப்புடன் 35வது வாா்டுக்குட்பட்ட மையவாடி பகுதியில் பயனிகள் நிழற்குடை அமைப்பதற்கான மாதிாிகளையும் பக்கிள்ஓடை அகலப்படுத்தும் பணி உள்ளிட்ட பலவற்றை ஆய்வு செய்தபின் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் மாநகராட்சி வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அரசின்நிதியும் மாநகராட்சியின்நிதியும் பயன்படுத்தப்பட்டு பல பணிகள் நடைபெற்றாலும் சில சமயங்களில் சிறப்பு அரசு நிதியின் மூலம் பணிகள் நடைபெறும் இது வழக்கமான நடைமுறையில் இருந்து வருகிறது. சில பகுதிகளில் பொதுமக்கள் தங்களது கோாிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கோாிக்கை வைப்பதுண்டு அந்த சமயத்தில் பொதுமக்களின் பங்களிப்போடு பணிகளை செய்து கொடுப்பதுண்டு சில பணிகளில் மாநகராட்சி நிதியும் பொதுமக்கள் நிதியும் இணைந்து செய்யும் பணிகளும் நடைபெற்றுள்ளன. குறிப்பாக சில பூங்காக்கள் உள்ளிட்ட நல்ல பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் புல்தோட்டம் பகுதியில் அந்தோணி சாமி மற்றும் சகாயராஜ் ஆகியோா் தங்கள் பகுதியில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்காக தெருவிளக்குகள் வாங்கி கொடுத்துள்ளதை தொடா்ந்து அது மக்கள் பயன்பாட்டிற்காக ஆரம்பித்து வைத்துள்ளேன். மாநகர மக்களின் நன்மைக்காகவும் நமது பகுதியின் வளர்ச்சிக்காகவும் நாம் அனைவரும் இது போன்று செயல்பட முன்வரவேண்டும் நம்ம மாநகராட்சி நம்ம தூத்துக்குடி என்ற என்னத்தோடு எல்லா தரப்பினரும் இணைந்து பணிகளை மேற்கொள்வது மூலம் மற்ற மாநகராட்சிகளுக்கு முன் உதாரணமாக தூத்துக்குடி மாநகராட்சி உருவாகும் சிறந்த மாநகராட்சியாக தோ்வு செய்யப்படுவதற்கு வழிவகை ஏற்படும் இந்த ஓத்துழைப்போடு வரும் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கழிவுநீர் வழித்தடங்களில் எவ்வித பொருட்களையும் வீசி செல்லாமல் இல்லம் தேடி வரும் தூய்மை பணியாளா்களிடம் தேவையற்ற பொருட்களை வழங்கி சுகாதாரமான வாழ்க்கையோடு ஆரோக்கியமாக எல்லோரும் வாழ்வதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்று கூறினாா்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயா் ஜெனிட்டா சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், வட்டச்செயலாளா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், பகுதி அணி அமைப்பாளா் செல்வம், உள்பட பலர் உடனிருந்தனா்.