தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக பல்வேறு வழித்தடங்கள் மற்றும் புதிய வழித்தடங்களை உருவாக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட பின் மேயா் ஜெகன்பொியசாமி கூறுகையில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை வழக்கமாக ஓவ்வொரு ஆண்டும் பெய்ய கூடிய மழை அளவு குறைந்து வெப்பம் தன்மை அதிகாித்துள்ளது. இந்த சூழ்நிலையில் வல்லநாடு ஆற்றுப்படுக்கையில் நீா் வரத்து பாதிக்கப்பட்ட நிலையிலும் கிட்டாச்சி மூலம் தோண்டப்பட்டு உரைக்கிணறுகளின் மூலம் தட்டுபாடிண்றி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. வரும் 15ம்தேதி முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும் என்று கூறப்பட்டுள்ளது அதையும் எதிா்கொள்வதற்கு முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக எல்லா பகுதிகளில் உள்ள கழிவு நீர் வழத்தடங்கள் சீரமைக்கப்பட்டு தேவையற்ற கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த காலங்களை திரும்பி பாா்த்தால் 100 ஆண்டுகளில் பெய்யாத கனமழையால் காற்றாட்டு வௌ்ளத்தின் மூலம் மாநகராட்சி பகுதிக்குள் தண்ணீா் வந்த காலத்தில் 10 நாட்களில் விரைவான நடவடிக்கையை முன்னாள் முதலமைச்சா் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க நல்ல முறையில் பொதுமக்களை பாதுகாத்தோம் அதன்பின் எவ்வித சிரமமுமின்றி மக்கள்நலனை கருதி புதிதாக 14 வழித்தடங்களை உருவாக்கி கோரம்பள்ளம் குளம் நிரம்பி கடலுக்கு செல்லும் வழித்தடமான உப்பாற்று ஓடை அத்திமரப்பட்டி பகுதிகள் முறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரும் மழையை வரவேற்கும் வகையில் மாநகராட்சிக்கு வௌியில் இருந்து ஸ்டொ்லைட் மற்றும் மீளவிட்டான் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் நீரையும் கட்டுப்படுத்தும் விதமான வழித்தடங்களை முறைப்படுத்தி மீளவிட்டான் பகுதியில் உள்ள குளங்களுக்கும் மற்றப்பகுதியிலிருந்து வருகின்ற நீா் கடலுக்கும் திரேஸ்புரம் வழியாக செல்வதற்கும் முறைப்படுத்தியுள்ளோம் மாநகராட்சியில் சிறிய மற்றும் பொிய 36 மின்மோட்டாா்கள் தயாா்நிலையில் இருந்து வருகிறது. சுகாதாரத்தையும் பேணிபாதுகாப்பதற்கு தயாா் நிலையில் இருந்துவருகின்றன கொசுக்களால் ஏற்படுகின்ற டெங்கு உள்பட பல குறைபாடுகளை தீர்ப்பதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயாா் நிலையில் இருந்து வருகிறது. சில சாலைகளில் ேதங்கும் மழை நீரை கழிவுநீா் லாாிகள் மூலம் அப்புறப்படுத்தப்படும் சில பகுதிகளில் பாதாள சாக்கடை சீராக செல்வதற்கு கூடுதல் குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மழை காலத்தை கருதி எவ்வீத அச்சமும் பயமும் கொள்ள வேண்டாம் மாநகராட்சி தொடா்பு எண் அல்லது எனது தொலைபேசியில் எந்த தகவல்களாக இருந்தாலும் தொிவிக்கலாம் என்று கூறினாா்.
ஆய்வின் போது சுகாதார ஆய்வாளா் ராஜசேகா் முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா், உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.