நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் கடும் கண்டனம் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் கண்டன அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பெருந்தலைவர் காமராஜர் என்பவர் ஒரே ஒருவர்தான், அவரைப் போல் யாரும் வர முடியாது. எனவே மிகைப்படுத்தி பெருந்தலைவருடன் ஒப்பிட்டு நடிகர் விஜய் உட்பட யாரையும் பேசுவது என்பது சரியாக இருக்காது.” என பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் சமூக நீதி போராளி எஸ். பி. மாரியப்பன் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய ஒரு மாணவரின் தந்தை “கல்விக்காக பல உதவிகளைச் செய்து வரும் த.வெ.க தலைவர் விஜய்யை ’இளம் காமராஜர்’ என்று அழைக்கலாம்” எனப் பேசினார்.அதனைத் தொடர்ந்து தற்போது தமிழக வெற்றி கழகத்தினர் இளைய காமராஜர் விஜய் என AI போஸ்டர் வெளியிட்டுள்ளனர்அந்த போஸ்டரில் இருக்கையில் விஜய் அமர்ந்து நிலையிலும் காமராஜர் நிற்பது போன்ற போஸ்டர் இடம் பெற்றுள்ளது . காமராஜரை நேசிக்கும் உலகத்தில் உள்ள அனைத்து உள்ளங்களுக்கும் மன வேதனையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த நிகழ்வு பெரும் பரபரப்பு ஏற்பட்டது . போஸ்டரை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.இது குறித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் சமூக நீதி போராளி எஸ். பி. மாரியப்பன் கூறியதாவது :காமராஜரின் சரித்திரம், பெருமை,தகுதி பற்றி சரியான புரிதல் இல்லாதவர்களே இப்படி நினைக்கிறார்கள் இதனையடுத்து விஜய்யை காமரஜருடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டதற்கு பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இது போன்ற நிகழ்வு இனி நடைபெறாத வண்ணம் செயல்பட வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் தமிழக முழுவதும் போராட்டம் நடைபெறும் எனவும் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவன எஸ்பி மாரியப்பன் தெரிவித்தார்.