தூத்துக்குடி பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பா.ஜ., சார்பில் தொடர்ந்து 30 நாட்கள் பல்வேறு சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ., மருத்துவப் பிரிவு சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமில் மாவட்ட மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் ரவீந்திர பாலாஜி தலைமை வகித்தாா். மருத்துவப் பிரிவு மாநிலச் செயலாளர்கள் டாக்டர் ருக்மணி, டாக்டர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக கண் பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதனுடன் ரத்ததான முகாமும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், மாவட்ட செயலாளர் செல்வி, மாவட்ட துணைத் தலைவர்கள் சண்முகசுந்தரம், சிவராமன், இசக்கிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனர்.