


நாடார் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து MLA-வை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு நாடார் அமைப்புகளை ஒருங்கிணைத்து “நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு” சார்பில், நாடார் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் சரவணன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கைகள் மனு குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
குறிப்பாக, தமிழகத்தில் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து பெறப்படும் பனங்கள் மற்றும் தென்னங்கள் தொடர்பான தடைகளை நீக்குதல், பனை மரங்களைப் பாதுகாக்க தனியாக பனை வளத்துறையை உருவாக்குதல், பனை விவசாயிகளின் நலனை பாதுகாத்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் மருதம்புதூரைச் சேர்ந்த பனை விவசாயி மணிகண்டன் தொடர்பான சம்பவத்தில், அவருக்கு உரிய இழப்பீடாக ₹10 லட்சம் வழங்க வேண்டும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் நேரடியாக விளக்கமளிக்கப்பட்டதுடன், இதுதொடர்பாக பேட்டியும் அளிக்கப்பட்டது.
நாடார் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என “அனைத்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு” சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
கோரிக்கைகளை முன்வைத்தவர்கள்:
– பி.எம். அற்புதராஜ் – மாவட்ட தலைவர், சமத்துவ மக்கள் கழகம்
– எஸ்.பி. மாரியப்பன் – தலைவர், பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம்
– பி.ஜே. அற்புதராஜ் – மாவட்ட தலைவர், பனங்காட்டு மக்கள் கழகம்
– கே.எஸ். அழகு மந்திரி – தலைவர், தமிழ்நாடு காமராஜர் பேரவை
– ஏ. பாலகிருஷ்ணன் – தூத்துக்குடி மாவட்ட தலைவர், நாடார் மகாஜன சங்கம்
– பி. வேல்முருகன் – தலைவர், தா. வெள்ளையன் மக்கள் நலச்சங்கம்
– வழக்கறிஞர் எஸ்.பி. சிலுவை – தலைவர், சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு
– எஸ்.டி.கே. சிவா தென்மண்டல நாடார் சங்க தலைவர், தமிழ்நாடு நாடார் சங்கம்
– பிரசன்ன குமார் – தலைவர், காமராஜர் இலட்சியப் பேரவை
– எம்.எம். டேவிட் – பாண்டியனார் மக்கள் இயக்கம் நாடார் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் – MLA சரவணனை நேரில் சந்தித்து கூட்டமைப்பினர் மனு கொடுத்தனர்