தூத்துக்குடி தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளன்று தூத்துக்குடி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் டுவிபுரத்தில் உள்ள அதிமுக தலைமை காரியாலயத்தில் இருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.
வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே செல்ல அனுமதி. இந்த நிலையில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய கூடுதலாக ஒரு நபர் உள்ளே சென்று விட்டார் அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவர் வெளியே சென்றால் மட்டுமே வேட்புமனு பெற முடியும் என்று அதிமுக வேட்பாளர் செல்லப்பாண்டியனிடம் தேர்தல் அதிகாரி கூறிவிட்டார்.
இந் நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையின் வெளியே பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த விவேகம் ரமேஷ் மற்றும் இரண்டு பேர் உள்ளே செல்ல முயன்றனர் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இருவரையும் உள்ளே செல்ல விட முடியாது சரியான ஆட்கள் உள்ளே சென்று விட்டார்கள் கூடுதலாக உள்ேள அனுமதிக்க முடியாது என்று காவல்துறையினர் கூறிவிட்டனர். அப்போது வெளியே நின்ற விவேகம் ரமேஷ் வேட்பாளர் செல்லப்பாண்டியனை கூப்பிட்டார் உடனடியாக வேட்பாளர் செல்லப்பாண்டியன் வெளியே வந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்னை வேட்பு மனுத்தாக்கல் செய்ய விடாமல் தடுக்கிறீர்களா ஏன் உள்ளே விட மறுக்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது காவல்துறையினர் நான்கு பேர் உள்ளே அனுமதிக்கப்பட்டு விட்டனர் கூடுதலாக ஒரு நபரை உள்ள அனுமதிக்க முடியாது என்று தொடர்ந்து கூறி வந்தனர் அதற்கு அதிமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
இதனையடுத்து சப் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளே முன்னாள் நகர மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்த இரா .ஹென்றி மற்றும் மூன்று பேர் அலுவலகத்தில் உள்ளே நின்று கொண்டிருந்தார்கள் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இங்கு நிற்க கூடாது அலுவலகத்தின் விட்டு வெளியே செல்ல வேண்டும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்று காவல்துறை அதிகாரிகள் கூறினார்கள் அப்போது ஹென்றி மீண்டும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் எப்படி என்னை வெளியே செல்ல சொல்லலாம் நான் செல்வேன் என்னை தள்ளி விடக்கூடாது என்று தொடர்ந்து கூறி காவல்துறையினரும் ஹென்றியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர் அதன் பின்பு அலுவலகத்தின் வெளியே ரோட்டுக்கு வந்த பின்பும் காவல்துறையினருடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்போது காவல்துறை உயர் அதிகாரி வந்து சொன்ன போதும் கேட்காமல் மீண்டும் மீண்டும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் காவல்துறையினர் அதிகாரிகளை மீண்டும் ஹென்றி தொடர்ந்து பேசி வந்தார். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் நிலவியது 15 நிமிடம் நீடித்த வாக்குவாதம் அதன் பின்பு அமைதியானது வேட்பு மனு தாக்களின் போது அதிமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன் முதலில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதன் பின்பு முன்னாள் நகர் மன்ற தலைவர் ஹென்றி வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தேர்தல் ஆணையம் என்ன விதிமுறைகளை அறிவித்துள்ளதோ அதைத்தான் காவல்துறையினா் கடைப்பிடிப்பார்கள் அதனை மீறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அரசு அதிகாரிகள் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்களும் அதிர்ச்சியுடன் பார்த்தனர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்த மாதிரி செயலில் அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நிலைமை ஆகும் என்று பொதுமக்கள் புலம்பும் சூழ்நிலை உருவாகிறது.