தூத்துக்குடி தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கும், பெண்ணுரிமைக்கும், சமூக நீதிக்கும் வித்திட்ட புரட்சிக் கவிஞன், விடுதலைப் போரின் அக்னிக்குஞ்சு “மகாகவி பாரதியார் 105வது நினைவு தினத்தை முன்னிட்டும் மற்றும், சமூகநீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுதும் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரன் 69வது நினைவு தினத்தை முன்னிட்டும் இவ்விரு தலைவர்களின் திருவுருவப்படத்திற்கும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் அலங்காிக்கப்பட்ட அவர்களது படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மலா் தூவி மாியாதை செய்து வணங்கினாா்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ், துணை மேயா் ஜெனிட்டா, மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட அணி நிா்வாகிகள் அருண்குமாா், கவிதாதேவி, பிரபு, நிக்கோலாஸ்மணி, கணேஷ்குமாா், மாநகர அணி நிா்வாகிகள் சாரதி, ஜெயக்கனி, முருகஇசக்கி, பரமசிவம், ரூபராஜா, சாகுல்ஹமீது, ராமசந்திரன், வினோத், பொியசாமி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மேகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், செல்வகுமாா், கவுன்சிலர்கள் ஜெயசீலி, விஜயகுமாா், சரவணக்குமார், மகேஸ்வாி, மாியகீதா, வைதேகி, கண்ணன், இசக்கிராஜா, சந்திரபோஸ், பவாணி, வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பாலகுருசாமி, சுப்பையா, டென்சிங், ராஜாமணி, மூக்கையா முனியசாமி, செந்தில்குமாா், ரவீந்திரன், கங்காராஜேஷ், சக்திவேல், பகுதி அணி அமைப்பாளர் சுரேஷ்குமாா், முரளிதரன், காசிராஜன், மகேஸ்வாி, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், புஷ்பராஜ், மற்றும் மணி, சின்னக்காளை, சேகா், நாராயணன், உள்பட பலர் கலந்து கொண்டு மலா்தூவி மாியாதை செய்தனா்.