தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழை வெள்ளநீர் தேங்காத வண்ணம், குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாவதை தடுக்கும் விதமாக மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள், சிறு பாலங்கள் மற்றும் இயந்திர குழிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பிரதான மழை நீர் வடிகால்கள் ஆகியவற்றில் காணப்படும் மணல் சகதிகளை அகற்றும் பணி, மழை நீர் வெளியேற்றும் உந்து நிலையங்கள் மற்றும் மழை வெள்ள நீரை அப்புறப்படுத்துவதற்கான மின் மற்றும் டீசல் மோட்டார்களின் இயக்க நிலை ஆகியவற்றினை மாநகராட்சி ஆணையா் ப்ரியங்கா ஆய்வு மேற்கொண்டதுடன் வரக்கூடிய மழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு ஏதுவாக அனைத்து பணிகளையும் நிறைவு செய்து தயார் நிலையில் இருக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆணையா் ப்ாியங்கா ஆய்வு