தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு சார்பாக மாவட்டத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தை பெற்றோர் பார்வைக்கு காட்சிப்படுத்த வேண்டும் அதிக கட்டணம் வசூல் செய்வது தடுக்க வேண்டும் கட்டண விவரங்களை வகுப்பு வாரியாக தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் கல்வி என்பது வணிகம் அல்ல உரிமை பெற்றோர் மீது சுமத்தப்படும் அநியாயச் சுமையை அரசு தடுக்க வேண்டும் என்று இரண்டு மாவட்ட கல்வி அலுவலர் டிஇஓ அதிகாரிகளிடம் மனு அளித்தனா்.
மக்கள் நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அகமது இக்பால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் விக்னேஷ், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக மாநில துணை பொதுச் செயலாளர் முகமது ஜான், தாயக மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அஹமது, தமிழக வாழ்வுரிமை கட்சி தொகுதி செயலாளர் கண்ணன், சமூக ஆர்வலர் சுடலை, தாயக மக்கள் கட்சி இப்ராஹிம் உள்பட பலா் உடனிருந்தனா்.