Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தவெக அரசு தேர்தலில் அறிவித்த அனைத்து விவசாயிகளுக்குமான பயிர் கடன் ரத்து வேளான் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் குற்றச்சாட்டு

Last updated: August 14, 2026 5:12 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி ஆக 15,

விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்கடன் முபமையாக தள்ளுபடி செய்யாதது, மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனம் காட்டி காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை பெற்றுத் தராத விஜய் தலைமையிளான தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதன்படி ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நேற்று 14.08.2026 அன்று காலை 11 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசுகையில் , தவெக தேர்ல் வாக்குறுதியில் அறிவித்தது ஐந்து ஏக்கருக்கு கீழுள்ள விவசாயிகளுக்கு முழு விவசாய கடன்களும் ரத்து செய்யப்படும் என்றும். ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50% விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்துவிட்டு இன்று வெறும் ரூ.75,000/- மட்டும் தள்ளுபடி செய்துவிட்டு விவசாயிகளை ஏமாற்றி வஞ்சித்து வருகிறது தவெக அரசு,

தேர்தலுக்கு முன்னொன்றும் பின்னொன்றுமாக முதலமைச்சர் விஜய் செயல்பட்டு வருகிறார் என்பது தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற வேளாண் பட்ஜெட் தாக்கலே சாட்சி. இது விவசாயிகளுக்கு செய்யும் மிக பெரிய துரோகம் ஆகும்.

மேகதாதுவில் கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரிக்கு குறுக்கே புதிதாக ஒரு அணை கட்டுவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றது. மேகதாவில் அணைக் கட்டினால் தமிழகத்தில் காவிரி பாசனம் பாலைவனம் ஆகிவிடும்,

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காவிரிக்கு என்று தனி காவேரி மேலாண்மை என்னும் ஒரு ஆணையத்தை உருவாக்கி அதனை உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல் பெற்று தமிழகத்திற்கு காவிரியில் உரிமையை பெற்று தந்து விவசாயிகளுக்கு தண்ணீர் கொண்டு வந்ததை தற்போதைய த.வெ.க அரசு சுட்டிக்காட்டாமலும், முறைப்படுத்தாமலும் இன்று சட்டமன்றத்தில் புதிதாக தீர்மானம் கொண்டு வருவது போல் ஒரு நாடகம் நடத்தி வருகிறது .

 

வங்கியில் விவசாயிகள் பெற்ற கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

மேகதாவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும், காவிரி நீரில் நமக்கென்று உரிமை உள்ளது அந்த உரிமையை பெற்று தந்தது புரட்சித்தலைவி அம்மா, அந்த உரிமையின்படி மத்திய அரசிடம் போராடி தவெக அரசால் தண்ணீரை பெற முடியாத அவல நிலையில் பொம்மை முதல்வராக விஜய் இருந்து கொண்டிருக்கிறார் .

மேலும் இந்த தவெக அரசு தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை,

இன்று அதிமுக ஆட்சி அமைத்திருந்தால் கழகப் பொதுச் செயலாளர் அறிவித்தது போல் அனைவருக்கும் வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் வந்திருக்கும், மகளிர்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் கிடைத்திருக்கும், காவிரியில் தமிழகத்தில் உரிமை எடப்பாடியாரால் நிலைநாட்டப்பட்டிருக்கும் என்றார்.

மேலும், அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிங்காரம் பேசுகையில் அதிமுகவில் வெற்றி பெற்று ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். கட்சித் தகவல் தடை சட்டத்தில் பதவி பறிபோய்விடும் என்ற நோக்கில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து கழகத்தில் சேர்த்துக் கொண்டனர். சேர்ந்தவர்கள் இங்கு ஒற்றுமையாக இருக்கிறார்களா என்றால் இல்லை மீண்டும் கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு கொண்டிருக்கிறார், இன்று நாம் ஆளுகின்ற கட்சியாக இல்லை என்றாலும் விவசாய பிரச்சனை மக்கள் பிரச்சனைகளுக்காக என்றும் களத்தில் போராடி வரும் கட்சியாக உள்ளோம் ஆனால் இன்று மக்களை காக்க வேண்டிய தேவைக்கு அரசாங்கம் அதைப்பற்றி கவலைப்படவில்லை,

கிட்டத்தட்ட 20 ஆண்டு 25 ஆண்டுகாலம் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இன்று கட்சிக்கு துரோகம் செய்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் என்ன தவறு, மாவட்டச் செயலாளர் பதவிகளை இருந்து எடுத்த போதிலும் அவர்களுக்கு அதை விட உயர்வான கழக அமைப்புச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வழங்கினார் ஏற்றுக்கொள்ளாமல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

காரணம் அவர்கள் ஒரு முடிவை எடுத்துள்ளனர் தாமாக சென்றால் எம்.எல்.ஏ பதவி பறிபோகும் எனவே கட்சியில் இருந்து அவர்களாக நீக்க வேண்டும் என எண்ணுகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் தொண்டர்கள் மத்தியிலும் ஒருவித குழப்பம் உள்ளது இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கழக அமைப்புச் செயலாளர் என்ற முறையிலும் 54 ஆண்டு கால அதிமுக தொண்டர் என்ற முறையிலும் கழகப் பொதுச் செயலாளர் ஒரு வேண்டுகோளை வைக்கின்றேன். கழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி வரும் எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம், நத்தம் விசுவநாதன், கே.பி.அன்பழகன் ஆகிய நான்கு பேர் குழப்பத்தை விளைவித்து வருகின்றனர் இவர்கள் நான்கு பேரை மட்டும் நீக்கினாலே கட்சியில் கட்சியில் உள்ள குழப்பங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி ஆகிவிடும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆரம்பித்து புரட்சித்தலைவி அம்மாவால் கட்டிக்கார்த்த இயக்கத்தை அழிக்க நினைக்கின்றார்கள் இவர்கள்.

அதிமுக என்பது ஏழை எளிய சாமானியனின் கட்சி, யாராலும் அழிக்க முடியாது இந்த குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நான்கு பேரும் வேறு கட்சிக்கு செல்வது என்று முடிவு செய்துள்ளனர் எனவே நீங்களாக வெளியேறுங்கள் என்றார்.

இந்நிகழ்வில் கழக அமைப்பு சாரா ஓட்டுநர் இணைச்செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட அவைத் தலைவர்கள் திருப்பாற்கடல், முன்னாள் எம்.எல்.ஏ என்.கே.பெருமாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் இரா.ஹென்றி, செங்கான், கழக இலக்கிய அணி இணைச்செயலாளர் முடிமண் ராமசாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாநில சிறுபாண்மை பிரிவு துணைச் செயலாளர் முஸ்தப்பா, முன்னாள் சேர்மன் வசந்தாமணி ,மாவட்ட பொருளாளர் சேவியர், வெம்பூரார், சந்தானம், முருகேஸ்வரி, செரினா, ராமகிருஷ்ண கார்த்திக்,

மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள் எம்.பெருமாள், கே.விஜயகுமார், பில்லா விக்னேஷ், டேக் ராஜா, ஜெயச்சந்திர பிரபாகர், நடராஜன், டார்சன், ஜே.ஜே. தனராஜ், எம்.ஆர்.வி கவியரசன், அருண்ஜெபக்குமார், பத்மாவதி கனகசுந்தரம், என்.ஜி.ராஜேந்திரன், ஜாக்சன் துரைமணி, டாக்டர் எஸ்.எம்.ஏ.கோசல்ராம்ராஜா, சோலைசாமி, பால கணேசன், லட்சுமண பெருமாள் தலைமைக் கழக பேச்சாளர்கள் எஸ்.டி.கருணாநிதி, முரகானந்தம், எஸ்.ஆர்.சுகந்தன்ஆதித்தன், இளங்கோ, சரவணபெருமாள், கல்வி குமார், நிலா சந்திரன், கே.என்.ஆனந்தராஜ், பகுதி செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், சுடலைமணி, நட்டார்முத்து, நகரச் செயலாளர்கள் விஜயபாண்டியன், மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், அழகேசன், ராஜ்நாராயணன், அப்பாதுரை, மனோகரன், குணசேகரன், செல்வகுமார், வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ், அழகர்சாமி, போடுசாமி, பால்ராஜ், தனஞ்செயன், தனவதி, மகேஷ், ராமசந்திரன், கால்வாய் பரமசிவம், ஜவஹர், பேரூராட்சி செயலாளர்கள் வேதமாணிக்கம், செந்தில் ராஜகுமார், துரைசாமிராஜா, அசோக்குமார், அரசகுரு, அறுமுகநயினார், கிங்ஸ்லி ஸ்டாரிலிங், கோபாலகிருணணன், வீரவெற்றிவேல், மாரிமுத்து, ராஜ்குமார், ஆண்டி, முத்துராஜ், பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரைபாண்டியன், சுரேஷ்பாபு, மனுவேல்ராஜ், வெங்கடேஷ், அங்கமங்கலம் பாலமுருகன், ராஜா நேரு, ஜோஷ்வா அன்புராஜ், ஐடியல் பரமசிவன், கே.கே.பி.விஜயன், கணேசன், கொம்பையா, ஹார்பர் பாண்டி, எஸ்.கே.மாரியப்பன், ஆத்தூர் சுப்பிரமணியன், சோமசுந்தரம், மகளிர்கள் நிர்வாகிகள் முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, தேவவிண்ணரசி, ஜெயராணி, ரம்யாநாராயணன், ஞானபுஷ்பம், மெஜூலா, ஷாலினி, ஸ்மைலா, முத்துலெட்சுமி, ஜெயசுதா, மற்றும் சொக்கலிங்கம், பண்டாரவிளை பாஸ்கர், திருத்துவசிங், வெள்ளையா, சுரேஷ், பால்துரை, வக்கீல் ராஜ்குமார் உள்ளிட்ட தூத்துக்குடி தெற்கு, மாவட்டத்தை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் ெகாடைவிழாவையொட்டி நடைபெற்ற அன்னதானத்ைத மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்
Next Article *குடும்பத்தை இழிவுபடுத்தும் பேச்சு தேவையா? – நயினார் நாகேந்திரனுக்கு தவெக இளைஞர் அணி நிர்வாகி அபிஷேக் பொன்சீலன் கடும் கண்டனம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மலர் அஞ்சலி!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பகுதியில் மேயா் ஜெகன் பொியசாமி மரக்கன்றுகள் நட்டினாா்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மதர் சமூக சேவை நிறுவன இல்ல திருமண விழாவில் மணக்கோலத்தில் மரக்கன்றுகள் நட்டிய மணமக்கள்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

எனது கணவரின் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுத்த உங்களுக்கு நன்றி தமிழக அரசு தற்காலிக பணியாளருக்கான ஆணை தான் வழங்கியுள்ளது எனக்கு நிரந்தர பணி வேலை வேண்டும் இன்சூரன்ஸ் பணம் வரவில்லை எனக்கு வாங்கித் தாருங்கள் கப்பல் மாலுமி மனைவி கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?