
தமிழக அரசு ஏற்கனவே அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணைகள் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அரசு காரில் எந்த ஒரு சைரன் பொருத்தப்படக்கூடாது அமைச்சருடன் பாதுகாப்புக்கு வரும் காவல்துறையினர் வாகனங்களில் மட்டும் சைரன் பொறுத்திருக்க வேண்டும் என்று உத்தரவு உள்ளது. இந்த உத்தரவு தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு அதனை ஒவ்வொரு அமைச்சர்களும் நடைமுறைப்படுத்தினார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது அதன்படி தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீநாத் தமிழக அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சருக்கு அரசு கார் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு வழங்கப்பட்டுள்ள காரில் சைரன் பொருத்தப்பட்டுள்ளது இது அரசு விதிகளுக்கு மீறிய செயலாகும். ஆகையால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அமைச்சர் ஸ்ரீநாத் காரில் பொருத்தப்பட்டுள்ள சைரன் அகற்றப்பட வேண்டும் அரசு விதிகளை மீறிய செயலாகும் ஆகையால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள காரில் பொருத்தப்பட்டு இருக்கும் சைரனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு விதிகளை மீறி அமைச்சர் ஸ்ரீநாத் காரில் சைரன்.