தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி பீடம் அய்யனடைப்பு கோரம்பள்ளம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கால பைரவர் சித்தர் பீடத்தில் ஆடி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீபிரத்தியங்கிராதேவியை வணங்கினால் திருமண தடை நீங்கும் புத்ரபாக்கியம் கிட்டும் மனம் நிம்மதி பெரும் செல்வ வளம் பெருகும் தீராத நோய்கள் தீரும் கடன் தொல்லைகள் தீரும் அரசியலில் மேன்மை கிட்டும் முன்னோர்களின் சாபம் நீங்கும் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும் முன் ஜென்ம பாவங்கள் நீங்கி குடும்பத்தில் ஆனந்தம் பொங்கிட பால் தயிர் மஞ்சள் இளநீர் சந்தனம் குங்குமம் தேன் உட்பட 16 வகையான அபிஷேகம் யாகம் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது. பூைஜயில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
தூத்துக்குடி சித்தர் பீடத்தில் அமாவாசையை வழிபாடு நடைபெற்றது.