தூத்துக்குடி மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் பள்ளிப்படிப்பை நிறுத்திய மாணவி கல்வியில் தொடர கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. அண்ணாநகரைச் சேர்ந்த கோமதியம்மாள் என்பவரின் மகள் கடந்த ஆண்டில் 10 வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தார். இந்த நிலையில் மாணவியின் தந்தை இறந்ததால் மாணவிக்கு பள்ளி கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனையறிந்த பங்காரு அம்மா பக்தர்கள் அந்த மாணவி 11ம் வகுப்பு படிப்பைத்தொடர நடவடிக்கை எடுத்தனர். திருவிக நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி.ஆர்.முருகன் தலைமையில் கல்வி உதவித்தொகையாக ரூ32,500/ மாணவிக்கு வழங்கப்பட்டது. துணைத் தலைவர் திருஞானம், கல்வி செய்திகள் நிறுவனர் பொன் பலவேசராஜா உட்பட பங்காரு அம்மா பக்தர்கள் கலந்து கொண்டனர். பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பங்காரு அம்மா பக்தர்கள் நலக் குழுவினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர். தற்போது மாணவியின் பாதியில் நின்ற கல்வி தொடர எடுத்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் பள்ளிப் படிப்பை தொடர மாணவிக்கு ஆன்மிக இயக்கம் கல்வி உதவித்தொகை வழங்கல்!