தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் இருந்து வருகின்றன. இதில் பாதிக்கும் மேற்பட்ட வாா்டுகளுக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது மீதி உள்ள வார்டுகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 60 வார்டுகளுக்கும் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என மேயா் ஜெகன் பொியசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் 3வது வார்டுக்குட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெண்கள் தங்களுடைய இரண்டு தெருக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகம் வரவில்லை என்று மதியம் 2 மணி அளவில் மேயர் ஜெகன் பொியசாமியிடம் புகார் செய்தனர். அப்போது அந்த பெண்களிடம் நீங்கள் வீட்டுக்கு செல்வதற்கு முன்பு நான் அங்கு வந்து விடுவேன் என்று கூறி உடனடியாக அதிகாரிகளை அழைத்து அந்தப் பகுதிக்கு செல்ல உத்தரவிட்டு மற்றொரு பகுதிக்கு குடிநீர் சரிவர வரவில்லை என்ற புகார் இருந்ததையடுத்து செல்விஜர் தெரு பகுதியில் சில வீடுகளுக்கு குடிநீர் வராமல் இருந்ததாக கூறப்பட்டதையடுத்து அங்கு பணிகள் நடைபெற்று வந்தது அந்தப் பணிகளை பார்வையிட்டு உடனடியாக பணிகளை முடிக்க வேண்டும் என்று கூறிவிட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இனி சீரான குடிநீர் உங்களுக்கு வந்துவிடும் சரி செய்யப்பட்டு விட்டது என்று கூறிவிட்டு ஹவுசிங் போர்டு பகுதிக்கு அங்கு சென்று உடனடியாக பணிகளை துவக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் அதிகாரிகள் உடனடியாக குடிநீர்பப்பை செல்லும் பகுதி தோண்டப்பட்டு புதியதாக குடிநீர் செல்வதற்கான பைப் லைன் பதிக்கப்பட்டு பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது அப்பகுதி பொதுமக்களிடம் நேரில் சென்று பணிகள் இரவுக்குள் முடிந்து விடும் நாளை 8 மணிக்கு உங்களுக்கு குடிநீர் சரியாக வந்து விடும் மீண்டும் நான் நாளை வந்து பார்வையிடுகிறேன் என்று கூறினார்
அப்போது பொதுமக்கள் நாங்கள் புகார் அளித்து வீட்டுக்கு வருவதற்குள் நீங்கள் எங்கள் பகுதிக்கு வந்து உடனடியாக பணிகளை துவக்கி உள்ளீர்கள் அதற்கு நன்றி என்றும் உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறினார்கள் அதற்கு மேயர் அது எனது கடமை எனது பணி தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கொடுத்த பொறுப்பு அதனை நான் சிறப்பாக செய்ய வேண்டும் அதைத்தான் செய்கிறேன் உங்களுக்கு என்ன குறை இருந்தாலும் எப்போது வேண்டுமானால் என்னை நேரில் சந்திக்கலாம் இல்லையென்றால் தொலைபேசி மூலமும், நோில் சந்தித்தும் அந்த குறைகளை உங்களுக்கு உடனடியாக சரி செய்து தருவேன் என்று கூறினார். பொதுமக்கள் புகார் அளித்த முப்பது நிமிடத்தில் அப்பகுதிக்கு சென்று உடனடியாக பணிகளை துவக்கி நாளை முதல் சீரான குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்ததற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
உடன் கவுன்சிலா்கள் சுரேஷ்குமார். முத்துவேல். திமுக வட்டச் செயலாளர் ரவிந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலாகள் உடன் இருந்தனர்