Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்இந்தியா

அரசு விதிமுறைகளை மீறி பள்ளிகளில் கட்டண வசூல் நடவடிக்கை எடுக்க பிஜேபி மாவட்ட தலைவா் சித்ராங்கதன் கலெக்டாிடம் கோாிக்கை

Last updated: May 21, 2026 9:18 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் மாவட்ட கலெக்டா் விஷுமகாஜனுக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல அரசு உதவிபெறும் பள்ளிகள், தமிழக அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விதிமுறைகளை மீறி, சிறப்புக்கட்டணம், கல்வி மேம்பாட்டு நிதி, ஆய்வகக் கட்டணம், பராமரிப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் சிறு வியாபாரிகளைச் சேர்ந்த ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதற்கும், 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கும் ஆயிரக்கணக்கில் கட்டணம் கேட்டு வற்புறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பல கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகள் இல்லாத சூழலில், அரசு உதவிபெறும் பள்ளிகளை மட்டுமே பொதுமக்கள் நம்பி உள்ளதால், இந்த கட்டணச் சுமையால் மாணவர்கள் இடைநிற்றல் நிலைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் கட்டண வசூல் தொடர்பாக தனிப்பட்ட கண்காணிப்பு குழுவை அமைத்து தணிக்கை நடத்தவும், விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவராக மால்மருகன் நியமணம் ஜி.கே.வாசன் அறிவிப்பு
Next Article ஜி.கே.வாசன் நிழலாக வலம் வந்த என்டிஎஸ் சாா்லஸ் தமாகாவிலிருந்து விலகி அமைச்சா் ஆனந்த முன்னிலையில் தவெகவில் ஐக்கியம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் 3000 மேயர் ஜெகன்பொியசாமி தகவல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் மாணவர் பேரவைத் துவக்க விழா நடைபெற்றது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தமிழக அமைச்சரவையை மாற்றம் செய்ய முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனடிபடையில் குடும்ப ஆதிக்கம், தொடர் புகார்கள், அதிகார மோதல் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதில் புதியவர்களுக்கும் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கவும், அதிமுகவில் முக்கிய பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் இடைத்தேர்தலில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு தவெக தலைமையிலான அமைச்சரவையில் முக்கிய துறைகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு அமைச்சரவையை பொருத்தவரை முதல்வருடன் சேர்த்து 35 பேர் அமைச்சர்களாக இருக்க முடியும். தற்போது தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. விஜய் முதல்வராக இருக்கும் நிலையில் 34 பேர் அமைச்சர்களாகி விட்டனர். இதனால் புதிதாக ஒருவரை அமைச்சராக்க வேண்டும் என்றால் தற்போது அமைச்சராக இருக்கும் ஒருவரை நீக்கம் செய்ய வேண்டும் என்ற நிலையில் கடந்த சில மாதங்களாக அமைச்சர்கள் மீதான தீவிர கண்காணிப்பை உளவுத்துறை தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றன. இந்நிலையில் தான் முதல்வர் விஜய் தனது அமைச்சரவையை மாற்றம் செய்வது பற்றிய யோசனையில் இறங்கி உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கட்சியில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் இணைந்த நிலையில் அவர்களுக்கு பொறுப்பு வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதேபோல் புதிதாக அமைந்த தவெக அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சர்ச்சைகள் சூழ்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும் இந்த விஷயம் பற்றி முதல்வா் விஜய் சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது தொடர் சர்ச்சைகள், புகார்களில் சிக்கியுள்ள பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்களை நீக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் பெயராக தாம்பரம் சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏவான சரத்குமாரின் பெயர் உள்ளது. இவர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டி பார்த்தபோது போதைப்பொருள் பயன்படுத்தியதாக வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. சரத்குமாரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது தவெக அரசிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முதல் ஆளாக சரத்குமார் நீக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் சமூகநலம் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி இந்த பட்டியலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ராக்கெட் ராஜாவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இது சர்ச்சையை கிளப்பியது. அதேபோல் விருதுநகர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவும், தொழில்துறை அமைச்சருமான கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேடை பேனரில் கீர்த்தனாவின் பெயர் முதலில் இடம்பெற்றிருப்பதற்கு ஜெகதீஸ்வரி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியானது. இதில் தவெக தலைமை அதிருப்தியாகி உள்ளது. அமைச்சர்கள் சரத்குமார் மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோர் சம்பந்தப்பட்ட இந்த விவகாரங்களையும் அவர்கள் கையாண்ட விதத்தால் கட்சி மேலிடம் அதிருப்தியாகி உள்ளது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி, திருநெல்வேலி உள்ளிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள் மாவட்டத்திலுள்ளவர்களுக்கு அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில் விரைவில் அமைச்சரவை மாற்றத்தில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் எனவும் இத்தகைய மாற்றத்தின் போது தொடர்ச்சியான கட்சி நிர்வாகிகளிடையேயான மோதல் போக்கு, குடும்ப உறவினர்களின் ஆதிக்கம் உள்ளிட்ட பல்வேறு தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், சிறு குறு, நடுத்தர தொழிலக அமைச்சருமான மதன்ராஜாவும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் எனவும் இதேபோல் அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம். அதன்படி விராலிமலை தொகுதியின் மாஜி எம்எல்ஏ சி விஜயபாஸ்கர், கரூர் மாஜி எம்எல்ஏ எம்ஆர் விஜயபாஸ்கர், அம்பை முன்னாள் எம்எல்ஏ இசக்கிசுப்பையா உள்ளிட்டவர்களில் இடைத்தேர்தலில் வென்று வரும் பட்சத்தில் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கும் பொருட்டு கொங்கு மண்டலம், டெல்டா மாவட்டங்களில் கட்சியை பலப்படுத்திட கூடுதலாக செயல்படாத அமைச்சர்களின் பட்டியலுடன் இத்தகைய மாற்றங்கள் இருக்கலாம் என கூறப்படுகின்றன. மேலும் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் தவெகவின் சேலம் தெற்கு தொகுதியின் எம்எல்ஏ விஜய் தமிழன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருக்கும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஏஎம் ஷாஜகான் ஆகியோரின் அமைச்சர்கள் பதவிகளும் மாற்றம் செய்வது குறித்து பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் விசிக சார்பில் வன்னியரசு அமைச்சராக உள்ளார். திண்டிவனம் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் வன்னியரசு ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக உள்ளார். தங்களுக்கு இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வழங்க வேண்டும் விசிக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களின் துறைகளில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய அமைச்சரவை மாற்றம் தொடர்பான விவகாரம் தற்போது பரிசீலனையில் மட்டுமே உள்ளது எனவும், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு இன்னும் சில மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் எனவும், இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அமைச்சரவையை மாற்றம் செய்வது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகின்றன. ஊழலற்ற நிர்வாகம், சமூகநீதி பார்வை, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை கவனத்தில் கொள்ளும் தமிழ்நாடு முதல்வர் விஜயின் இத்தகைய அமைச்சரவை மாற்றம் என்பது மக்களின் செயல்திட்டங்கள், கட்சி நிர்வாக சீரமைப்பு, ஊழல், குடும்ப ஆதிக்கம், பாகுபாடு சர்ச்சைகளை நீக்கி இனிவரும் காலங்களில் சீரான நிர்வாக செயல்பாடுகளையும், வெளிப்பாடான ஆட்சியை வெளிக்கொண்டு வர உதவும் என்கிற பாணியில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என அரசியல்ரீதியான விமர்சனங்கள் வெளிவருகின்றன.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மேயா் ஜெகன் பொியசாமி சாா்பில் கலைஞர் பிறந்தநாள் விழா

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?