தூத்துக்குடி கலெக்டா் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டா் விஷுமகாஜன், தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மூத்தகுடி மக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பொதுமக்களிடமிருந்து கல்விஉதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்திபட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவைஉதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் இதர பல்வேறு மனுக்கள் என 582 மனுக்களும், மூத்தகுடிமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்யேக இடத்தில் மூத்தகுடி மக்களிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 22 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களிடமிருந்து 50 மனுக்கள் என மொத்தம் 654 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அலிம்கோ நிறுவனத்தின் சார்பில் 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.16000/- மதிப்பீட்டில் மடக்குச் சக்கர நாற்காலியும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.18000/-மதிப்பீட்டில் காதுக்கு பின்புறம் அணியும் காதொலி கருவியும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1536/- மதிப்பீட்டில் ஊன்று கோலும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1900/- மதிப்பீட்டில் Knee Trace-ம் 04 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.37,436/- மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை கலெக்டா வழங்கினார்.
தொடர்ந்து முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பாக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்த முன்னாள் படைவீரர்களின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு மின்மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 02 பயனாளிகளுக்கு தலா ரூ.6600/- மதிப்பில் எனரூ. 13200/- மதிப்பீட்டில் மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை கலெக்டா் விஷுமகாஜன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், சமூக பாதுகாப்புத்திட்டம் தனித்துணை ஆட்சியர் இரமணன், உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம் ஓய்வு பெருமாள், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் காமாட்சி மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.