Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தமிழகம்

ஆக.27ல் விநாயகர் சதுர்த்தி விழா: பெரம்பலூர், கரூர், திருச்சியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம்!!!

Last updated: July 21, 2025 9:53 pm
Dinapuratchi
Share
SHARE

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரம்பலூர், திருச்சி, கரூர் உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்காக அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் விரதம் இருந்து 2 அடி முதல் 12 அடி வரை பல விதமான விநாயகர் சிலைகளை முக்கிய இடங்கள், வீடுகளில் வைத்து 3 நாள் சிறப்பு வழிபாடுகள் நடத்தி மூன்றாம் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பார்கள்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது. இதற்காக விநாயகர் சிலைகள் பல இடங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெரம்பலூர், கரூர், திருச்சி மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிலை தயாரிப்பாளர்கள் விதவிதமான விநாயகர் சிலைகளை வடிவமைத்து, வர்ணத் பூசி, சதுர்த்தி விழாவுக்காக தயார் செய்து வருகின்றனர். சிலைகள் மாவு, களிமண் மற்றும் பல்வேறு வண்ணங்களை பயன்படுத்தி செய்யப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கேட் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு 2 அடி முதல் 12 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு உள்ளது. பரமசிவன்-பார்வதி ஆகியோருடன், பல்வேறு வாகனங்களில், சிங்கத்தின் மீது விநாயகர் என்று விதவிதமாக விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து விநாயகர் சிலைகளுக்கான பாகங்கள் தனித்தனியாக ஆங்காங்கே தயாரிக்கப்பட்டு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர்கேட் பகுதிக்கு வரவழைக்கப்படுகின்றன.

பின்னர் இங்கு அவற்றை நேர்த்தியாக பொருத்தி, சிலைகள் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு முழு வடிவம் கொடுக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளின் விலை ரூ.3,500 முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேவைக்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் விநாயகர் சிலைகளின் வடிவமைப்பை பார்த்து ஆர்டர் கொடுத்து செல்கின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேலான நாட்கள் உள்ள நிலையில் தற்போதே விநாயகர் சிலைக்கு ஆர்டர்கள் குவிந்து வருவதால், கைவினை கலைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி முடிந்து நவராத்திரி வருவதால் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். கரூர் மாவட்டம் திருச்சி-கரூர் மணப்பாறை சாலையில் உள்ள மயிலாடி பகுதியில் விநாயகர் சிலைகள் இரண்டரை அடி முதல் 10 அடி வரை தயாரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சி கொண்டையம்பேட்டை பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article திருச்செந்தூர் சரவணப்பொய்கை குளம் புனரமைப்பு: விரைவில் பக்தர்களுக்கு அனுமதி!!!
Next Article ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு சிறப்பு மையம் தமிழ்நாட்டில் அமைகிறது!!!

You Might Also Like

அரசியல்தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடியது பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜர் பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர் திமுக எம்பி சிவா : நாவடக்கம் தேவை பகிரங்க மன்னிப்பு கேட்கா விட்டால் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாறிப் போய் விடுவீர்கள் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் ஆவேசம்!!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

கனிமொழி கருணாநிதி எம்.பி முன்னெடுப்பில் தூத்துக்குடி நெய்தல் கலைத் திருவிழா – 2025 கோலாகலமாக தொடக்கம்!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

முடி திருத்தும் தொழிலாளர்கள் மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் – சுமார் 500 பேர் திரண்டனர்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?