தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளநீர் தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தொடங்கப்பட்ட “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், இன்று (19.06.2025) தூத்துக்குடி வட்டம், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 15 ஆவது வார்டு செல்வ காமாட்சி நகரில் மழை காலங்களில் வெள்ளநீர் தேங்குவதை தடுப்பது குறித்து மேற்கொள்ள வேண்டிய தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், மாநகராட்சி துணைப் பொறியாளர் சரவணன், தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.