Sunday, 1 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடியது பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு!!

Last updated: July 16, 2025 3:14 pm
Dinapuratchi
Share
SHARE

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று (15.07.2025) காலை 7 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள சேர்வைக்காரன்மடம் காமராஜர் சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா வருகை தந்தார். எம்எல்ஏவிற்கு பெருந்தலைவர் மக்கள் நலச்ங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் நல பணிகள் செய்வதை பாராட்டி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மாரியப்பனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் காமராஜர் சிலை முன்பு கேக் வெட்டி பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குலையன்கரிசலில் உள்ள காமராஜர் சிலைக்கும், தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் காமராஜர் சிலைக்கும், தமிழ் சாலையில் உள்ள காமராஜர் மார்க்கெட் பகுதியில் அமைந்திருக்கும் காமராஜர் சிலைக்கும், பழைய மாநகராட்சி காமராஜர் சிலைக்கும், தருவைக்குளம் பகுதியில் உள்ள திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

அதுபோல் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பள்ளிச்சீருடைகள், ஸ்கூல் பேக், ஸ்கூல் யூனிபார்ம், போன்ற கல்வி உபகரணங்கள் ஏராளமாக வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சி, காமராஜர் சிலை அருகே அறுசுவை மிக்க அசைவ விருந்து அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த அசைவ விருந்து அன்னதானத்தை நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், சமுதாய சொந்தங்கள், ஊர் பெரியவர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து வள்ளிநாயகபுரம், வேப்பலோடை பகுதிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர். அதோடு சென்னை வேப்பலோடை நாடார் அமைப்பு சார்பில் நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்ற 123 பால் குடம் எடுத்து காமராஜர் திருவுருவச் சிலைக்கு பாலாபிஷேகம் செய்த நிகழ்வில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் மூலக்கரை என். வெங்கடேச பண்ணையார் நற்பணி மன்ற சார்பாக மாநில பொதுச் செயலாளர் சொர்ணவேல் நாடார், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் சிலுவை நாடார் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் ஏ.சி. துரை நாடார், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், ஆகியோர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

பின்னர் வேப்பலோடை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு புக், ஸ்கூல் பேக் கல்வி உபகரணங்களை மாரியப்பன் வழங்கினார். இதில் வேப்பலோடை முன்னாள் பஞ்சாயத்து தலைவர், பனையூர் பஞ்சாயத்து தலைவர், ஓபிஎஸ் அணி தருவைகுளம் மாடசாமி, உட்பட பலர் பங்கேற்றனர்.

 

நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் ஏ. லெட்சுமணன், மாநில பொருளாளர் எம்.எஸ்.டி. ரவிசேகர், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சாமுவேல் ராஜ், மாவட்டத் தலைவர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் செல்வகுமார் மாநிலச் செயலாளர் சண்முகவேல், மாநில துணைத்தலைவர் எம். கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் கல்வி நிறுவன தாளாளர் மில்லை ஸ்டீபன், இளைஞர் அணி பெத்துவிஷ்ணு, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கணேசன், நெல்லை மாவட்ட செயலாளர் வள்ளியூர் என். பழனி, சேர்வைக்காரன் மடம் ராஜு, தொழிலதிபர் மாஸ் ஆம்புலன்ஸ் உரிமையாளர் தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் முனியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் சக்திநாராயணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவா, பெணிட்டோ, காமராஜர் நகர் கதிர் (எ) சத்திய தாஸ், ரஞ்சித் அழகுதுரை, கோல்டன் ஸ்டீல் குமார் ஜேக்கப், கிறிஸ்டோபர், கார்த்திக், நட்டாத்தி ஒன்றியம் குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை மெகா நலத்திட்டங்கள், அன்னதானம், கல்வி உபகரணங்கள் வழங்குதல் என “மாஸ்” காட்டிய பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன். இளைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்று உற்சாகம்!!!
Next Article தூத்துக்குடிக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க மாநில வர்த்தக அணி சார்பில் முடிவு: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் வரும் 19 ம் தேதி அதிமுக நிர்வாகிகளுடன் முன்னேற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம்

You Might Also Like

அரசியல்தமிழகம்

‘அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் வாக்களிப்போம்…’ சிவகங்கை மாவட்டம் முழுவதும் எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்: விழுப்புரம் ரோடு ஷோ பேச்சால் புதிய சர்ச்சை!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு மார்க்கெட் வியாபாாிகள் சங்கம் சாா்பில் விநாயகா் சிலை வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று விஜா்ஜனம் செய்யப்பட்டது!!!

By Dinapuratchi
அரசியல்

திமுக கோட்டையாக கொங்கு மண்டலத்தை மாற்ற ஆட்டத்தை ஆரம்பித்த செந்தில் பாலாஜி : எந்தச் சர்ச்சையிலும் சிக்காத செந்தமிழ் செல்வனை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக நியமனம்…

By Dinapuratchi
குற்றம்தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் பங்கேற்பு:

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?