சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸ் விசாரணையின் போது கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களை உலுக்கியுள்ளது.
இது குறித்து தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் டூவிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் மரணத்தை முதலில் வலிப்பு நோயால் இறந்தார் என திசை திருப்ப காவல்துறை முதலில் முயற்சி எடுத்ததாக தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்தார். மேலும் இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டும் இல்லையெனில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என எடப்பாடியார் தனது கண்டனத்தை தெரிவித்ததால் தான் தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் அவர் தெரிவிக்கையில் ஸ்டாலின் ஆட்சியில் 4 ஆண்டுகளில் நடந்த 24 காவல் மரணங்கள் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் ஆகும். இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்திகிறோம்.
மேலும் அஜித்குமார் உயிரிழந்ததற்கு காரணம் வலிப்பு என இந்த வழக்கை காவல்துறை திசை திருப்ப நினைத்து வருவதாகவும் அஜித் குமார் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்த பிறகு தான் தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதுபோல் நீதிமன்றமும் இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து வருவது வரவேற்கத்தக்கது. நீதிமன்றம் இந்த மரணம் குறித்து முக்கிய கருத்துகளை அரசுக்கு தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சியின் சாதனைகள் என்னவென்றால் 4 ஆண்டுகளில் 24 லாக்கப் டெத் நடந்தது தான் சாதனை!! முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த அஜித் குமார் மரணத்திற்கு சிபிஐ மூலம் பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் குறித்த வழக்கில் அதிமுக கடுமையான முறையில் நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்ததால்தான் அதில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் பல ஆண்டுகள் ஆகியும் ஜாமீனில் கூட வெளிவர முடியாமல் ஜெயிலில் இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது . அந்த அளவிற்கு தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையோடு எடப்பாடியார் நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் தற்போது திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
ஜெய் பீம் படத்தில் வரக்கூடிய கதாபாத்திரம் போன்று வாலிபர் அஜித்குமார் துடிதுடிக்க அடித்து துன்புறுத்தி இருந்திருக்கிறார்கள் அவரது இறப்புக்கு ஸ்டாலின் அரசு உரிய பதில் சொல்லியே ஆக வேண்டும். “ஓரணியில் தமிழ்நாடு” என்று வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை விளக்க இருப்பதாக சொல்கிறார்கள். இவர்கள் என்ன சாதனை செய்தார்கள் நான்கரை ஆண்டு காலத்தில் 24 லாக்கப் மரணம் நிகழ்ந்திருக்கிறது.
திமுக ஆட்சியில் அனைத்து விலைவாசியும் உயர்ந்திருக்கிறது.
இதைத்தான் சாதனைகள் என்று சொல்ல வேண்டும் திமுகவின் நான்கரை ஆண்டு காலத்தில் எந்த சாதனைகளும் செய்யவில்லை, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்து மீண்டும் பொற்கால ஆட்சியை அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அமைத்து கொடுப்பார்கள் என்று செய்தியாளர் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தெரிவித்தார். இந்தப் பேட்டியின் போது மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் மில்லை ஆர்.எல். ராஜா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், முன்னாள் மாவட்ட மீனவர் அணி செயலாளர் அகஸ்டின், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன்,மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன் முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சண்முகபுரம் பேதுரு ஆலயம் பெருமன்ற உறுப்பினர் பிரபாகர் முன்னாள் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல இணைச் செயலாளர் சங்கர், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், வட்டப்பிரதி ஐயப்பன், 30 வது வார்டு வட்டச் செயலாளர் ஜெகதீஸ்வரன், கனிராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.