பனைத் தொழிலாளர்களுக்கு குரல் கொடுக்க கடந்த வாரம் உடன்குடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கும் போராட்டம் நடத்தினார், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்து ரமேஷ் நாடார் இந்த போராட்டத்தில் பங்கேற்று சில கருத்துக்களை பதிவிட்டார் அவரது கருத்துரிமைக்கு எதிராக சில கும்பல்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு கொலை மிரட்டல் விடுத்தனர் பனைத் தொழிலாளர்களுக்கு எந்தவித ஆதரவும் தெரிவிக்க முன்வராமல் அவர்களுக்கு குரல் கொடுத்த நபர்களையும் மிரட்டும் வகையில் செயல்பட்ட சில அமைப்புகளை சார்ந்தவர்கள் தாங்கள் பனைத் தொழிலாளிகளின் பாதுகாவலன் என்பது போல் நாட்டில் வேஷம் போட்டு வருகிறார்கள். அந்த அமைப்புகளை கண்டித்த பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் இந்த நிலையில் கண்டன அறிக்கையின் எதிரொலியாக தற்போது முத்து ரமேஷ் நாடார் கருத்துரிமைக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று ஒரு மிகப்பெரிய அறிக்கையாக பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனர் என் ஆர் தனபாலன் வெளியிட்டு இருந்தார். அதில் முத்து ரமேஷ் வீடு முற்றுகை போராட்டம் கருத்து உரிமையை தடுக்க நினைக்கும் வன்முறை கும்பல் அத்து மீறல்களுக்கு என் ஆர் தனபாலன் கண்டனம் என ஒரு அறிக்கை வெளியிட்டு அதில் நாடார் சமுதாயத்தில் போராட்ட குணம் கொண்ட இளைஞர்கள் ஒரு சிலரே முன் வருகின்றனர் அவர்களில் முத்து ரமேஷும் முதன்மையானவராக உள்ளார். அவர் சமுதாயத்திற்கென முன்னெடுக்கும் நல்ல போராட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பது பெரியவர்களின் அதாவது மூத்தவர்களின் கடமையாகும் இளைஞர்கள் இடையே சமுதாயப் பற்று குறைந்து வரும் வேளையில் இது போன்ற போராட்ட குணம் கொண்ட இளைஞர்களை பாராட்டி வரவேற்பது தான் மனித பண்பாகும் என்பது உள்ளிட்ட தனது கண்டன அறிக்கையை காலம் தாழ்த்தி அறிக்கை விட்டாலும் தற்போது விரிவான அறிக்கையை வெளியிட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனர் என் ஆர் தனபாலன் அவர்களின் செயல் வரவேற்கத்தக்கது இதுபோன்று பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமைக்காக குரல் கொடுத்தவர்களின் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டிக்கும் வகையில் இன்னும் சில அமைப்புகள் தங்களின் துணிச்சல் மிக்க கருத்துகளை பதிவிட வேண்டும் என பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் அதன் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் ஆகிய நான் கேட்டுக்கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கள் இறக்கும் போராட்டம் பற்றி முத்து ரமேஷ் நாடார் பேசிய கருத்துரிமைக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு காலம் தாழ்த்தினாலும் கண்டனம் தெரிவித்த என் ஆர் தனபாலன் அறிக்கையை பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் வரவேற்கிறது.
