Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

விபத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமாரிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்!!!

Last updated: November 21, 2025 5:23 pm
Dinapuratchi
Share
SHARE

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே வா எனும் தலைப்பில் நடத்திய கலந்துரையாடலில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா உள்பட ஓட்டபிடாரம்; சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை சந்தித்தார்.

தமிழகத்தில் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தெரிவித்த நிலையில் தமிழகம் முழுவதும் திமுக உள்ளடக்கிய மாவட்ட செயலாளர்கள் அதற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் தொகுதி களநிலவரம், மக்கள் மனநிலை, அரசு செய்த சாதனைகள் எந்த அளவிற்கு வரும் தேர்தலில் நமக்கு சாதகமாக அமையும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறியும் போது பல ஒன்றிய செயலாளர்கள் தங்களது தந்தை மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆற்றிய பணிகளையும் பொறுப்புக்களையும் எடுத்துக் கூறி அவரது மகன்கள், வாரிசுகள் என்ற கருத்தையும் பதிவு செய்தனர். எல்லா கருத்துக்களையும் கேட்டறிந்த நிலையில் குறிப்புகளையும் எடுத்துக் கொண்டு வரும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவதற்கு செயல்பட வேண்டிய நிலை குறித்து அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி உடனிருந்தார்.

பின்னர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்;துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் நிர்வாகிகள் பலர் சந்தித்து கலந்துரையாடினர்.

அப்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான சரவணக்குமார் கலந்து கொள்ளாதது குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது, ஒரு மாதத்திற்கு முன்பு தனது மகள் கல்லூரிக்கு சேலம் செல்லும் வழியில் கரூர் அருகில் விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் கோயம்புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் கிடைத்ததும் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமாரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது, மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் பலனாக தனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாகவும், என்மீது அக்கறை கொண்டு தாங்கள் நலம் விசாரித்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும், கூறினார் சரவணக்குமார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article முதல்வா் ஸ்டாலின் துணை முதல்வா் உதயநிதி எண்ணங்களை இளைஞர் அணியினா் நிறைவேற்ற வேண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!!
Next Article தமிழகத்தில் புரளிகள் மூலம் குளறுபடிகளை ஏற்படுத்தி குளிா்காய நினைப்பவா்கள் எண்ணம் நிறைவேறாது நலத்திட்ட உதவிகளை வழங்கி மீனவா் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் சூளுரை!!!

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி கடலில் மூழ்கிய விசைப்படகு 40 லட்சம் இழப்பு 9 போ் பத்திரமாக கரைசோ்ந்தனா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் சரவணன் எம்.எல்.ஏவையும் மிரட்டி, எங்கள் குடும்பத்தையும் தேவையில்லாமல் பாதிக்க முயற்சி நடைபெறுகிறது. நடுநிலையாக விசாரிக்க முனீஸ்வாி எஸ்.பியிடம் கோாிக்கை மனு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி முனீஸ்வரி நோில் அளித்த கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்ற எண் 20/2026 வழக்கு தொடர்பாக, என்னுடைய பெயரும் சம்பந்தப்படுத்தப்பட்டு தவறான தகவல்கள் கூறப்பட்டு வருவதால், உண்மை நிலையை தங்களிடம் பதிவு செய்யவும், எனது பாதுகாப்பிற்காகவும் இந்த மனுவை அளிக்கிறேன். நான் 03.05.2026 அன்று இசக்கியம்மாள் என்ற கமலாவுடன் காரில் சாயல்குடி சென்றிருந்தேன். இசக்கியம்மாள் எனது கணவரிடம் என்னை தவெக கட்சி நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக அழைத்து செல்வதாகக் கூறி தான் அழைத்துச் சென்றார். ஆனால், என்னைப் பொறுத்தவரை அந்த நாளில் என்மீது எந்தவிதமான பாலியல் குற்றமும், பாலியல் துன்புறுத்தலும், வன்முறையும் நடைபெறவில்லை. எனக்கு அப்படியான எந்த சம்பவமும் நடக்கவில்லை. என் முன்னிலையில் எந்தவித பாலியல் குற்றச்செயலும் நடைபெறவில்லை என்பதையும் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். பின்னர் 01.06.2026 அன்று இசக்கியம்மாள், பாலசுப்பிரமணியன் மற்றும் ஜெயபால் ஆகியோர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார் என்று அறிந்தேன். மேலும், சமூகவலைதளங்களில் பேட்டிகளில் பேசும்போது, அவருடன் மேலும் ஒரு பெண் வந்ததாகவும், அந்த பெண்ணும் பாதிக்கப்பட்டதாகவும் முதலில் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர், அந்த பெண் நான்தான் என்று எனது பெயரை மீடியா மற்றும் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தி, நான் சரவணன் எம்.எல்.ஏவிடம் பணம் வாங்கி அமைதியாகிவிட்டேன் என்று உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பி வருகிறார். மேற்படி வழக்கில், என்னையும் பாதிக்கப்பட்டவராக பொய்யாக கூறுமாறு இசக்கியம்மாள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தபோது, அவர் என்னை மிரட்டி வந்தார். நான் உண்மையைச் சொன்னால், “காவல்துறை உன்னை அடித்து சித்திரவதை செய்வார்கள்”, “உன்னை தவறாக காட்டும் வீடியோவை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்” என்று மிரட்டினார். மேலும், “குற்றம் நடந்ததாக நீ பொய் சொன்னால், பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் அரசு வேலை கிடைக்கும், இழப்பீடு கிடைக்கும், மேலும் நானும் உனக்கு பணம் வாங்கித் தருவேன்” என்று ஆசை வார்த்தைகளும் கூறினார். இவ்வாறு மிரட்டலும், ஆசை வார்த்தையும் கூறி, என்னை உண்மைக்கு புறம்பான ஸ்டேட்மண்ட் அளிக்க தூண்ட முயற்சி நடைபெறுகிறது. இதனால் நான் மிகுந்த மனஅழுத்தத்திலும், பயத்திலும், அவமானத்திலும் உள்ளேன். எனது பெயரை தவறாக பயன்படுத்தி, என்னை பொய்யான புகார் அளிக்க தூண்டி, இந்த வழக்கை வேறு நோக்கத்திற்காக பயன்படுத்த முயற்சி நடைபெறுகிறது என்று நான் அஞ்சுகிறேன். மேலும், இசக்கியம்மாள் எனது பெயரை தனது சமூக வலைத்தளங்களிலும், பேட்டிகளிலும் பயன்படுத்தி வருகிறார். நான் எம்.எல்.ஏவிடம் குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியன் மற்றும் ஜெயபால் ஆகியோரின் குடும்பத்தினரிடமிருந்தும் பணம் பெற்றுவிட்டதாக உண்மைக்கு புறம்பான அவதூறு தகவல்களை பரப்பி வருகிறார். இத்தகைய பொய்யான தகவல்கள் காரணமாக நான், என் கணவர் மற்றும் என் குடும்பத்தினர் மிகுந்த மனஉளைச்சல், சமூக அவமானம் மற்றும் பாதுகாப்பு அச்சத்தில் உள்ளோம். ஊர் மக்களிடையிலும், சமூக வட்டாரங்களிலும் என்னைப் பற்றிய தவறான பேச்சுகள் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் என் குடும்ப வாழ்க்கையும், என் மரியாதையும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனது பெயர், குரல் பதிவு, புகைப்படம், வீடியோ அல்லது என்னை அடையாளம் காணக்கூடிய எந்த தகவலும் என் அனுமதி இல்லாமல் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படாத படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், எங்கள் தரப்பு தவெ வோடு தொடர்புடையவர்கள் என்பதால், இந்த வழக்கு அரசியல் கோணமாக மாற்றப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் சரவணன் எம்.எல்.ஏவையும் மிரட்டி, எங்கள் குடும்பத்தையும் தேவையில்லாமல் பாதிக்க முயற்சி இருக்கிறதா என்பதையும் தாங்கள் நடுநிலையாக விசாரிக்க வேண்டுகிறேன். எனக்கு தெரிந்தவரையில், இந்த சம்பவத்துக்கும் ஸ்ரீவைகுண்டம் சரவணன் எம்.எல்.ஏவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் யாரையும் காப்பாற்றுவதற்காகவோ, யாரையும் தவறாக குற்றம் சாட்டுவதற்காகவோ இந்த மனுவை அளிக்கவில்லை. என்னைப் பற்றி பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதையும், எனக்கு எந்த பாலியல் குற்றமும் நடைபெறவில்லை என்பதையும், என்னை பொய்யான ஸ்டேட்மண்ட் அளிக்க மிரட்டியும் ஆசை வார்த்தை கூறியும் தூண்டியுள்ளனர் என்பதையும் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த மனுவை என் சொந்த விருப்பத்தால் அளிக்கிறேன். நான் யாருடைய அழுத்தத்தாலும், மிரட்டலாலும், தூண்டுதலாலும் இந்த மனுவை அளிக்கவில்லை. எனக்கு தெரிந்த உண்மையை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக என் சொந்த விருப்பத்தால் இந்த மனுவை அளிக்கிறேன். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயாராக உள்ளேன். எனவே, என் மனுவை ஏற்று, என் ஸ்டேட்மண்ட்-ஐ சட்டப்படி பதிவு செய்து, என்னை மிரட்டி பொய் புகார் அளிக்க தூண்டியவர்கள் மீதும், என் பெயரை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு அளித்துள்ள கோாிக்கை மனுவில் கூறியுள்ளாா்.

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள போத்தி விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

ரஜினியின் நடிப்பும் ஆன்மீகமும் அவரை சூப்பா் ஸ்டாராக இன்று வரை நிலை நிறுத்தியுள்ளது. நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?