தூத்துக்குடி,
ஜூன், 21.
எடப்பாடி பழனிசாமி குறித்து கேலி சித்திரம் வெளியிட்டதாக திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், தமிழக அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா
மற்றும் திமுக ஐடி விங் நிர்வாகிகள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும்,
முன்னாள் அமைச்சருமான
சி. த.செல்லப் பாண்டியன் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள
அதிமுக வர்த்தக அணி அலுவலகத்தில் வைத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது
டிஆர்பி ராஜா, மற்றும் ஐடி விங் நிர்வாகிகளுக்கு
கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி இருப்பது போல் அரை நிர்வாண கோலத்தில், ஆபாசமாக உண்மைக்கு புறம்பான செய்தியுடன் சமூக வலைதளங்களில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி கேலி சித்திரம் வெளியிட்டுள்ளது. இந்த செயல் ஒரு அரசியல் நாகரீகமற்ற இழிவான செயலாகும் கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு முதன் முதல் நிதி ஒதுக்கி திட்டங்களை செய்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அவரை பற்றி விமர்சித்து அருவருக்கத்தக்க வகையில் எடப்பாடியாரை பற்றி கேலி சித்திரத்தை வெளியிட்ட சாராய ஆலை அதிபர்
அமைச்சர் டி ஆர் பி ராஜா மற்றும் ஐடி விங் நிர்வாகிகள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அமைச்சர் டி ஆர் பி ராஜா தனது எக்ஸ் தளத்தில் உள்ள இந்த பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும்.
எடப்பாடியார் என்ற எளிய மனிதர் இன்று ஆளும் அரசின் குறைகளை நாள்தோறும் சுட்டிக் காட்டி வருவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் பதில் சொல்ல முடியாமல் தனி நபர் விமர்சனத்தில் திமுக இறங்கி உள்ளது.
கடந்த நான்கரை ஆண்டு காலம் மக்களுக்கான எந்த திட்டத்தையும் ஸ்டாலின் செய்யவில்லை. அதனால் அதை திசை திருப்ப அவதூறு செய்தியை தான் பரப்புகிறார்கள்.
மக்களை இனி திமுக என்ற நாடக கம்பெனி ஏமாற்ற முடியாது. இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி குறித்து போட்ட பதிவுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். நீங்கள் பதிவு போட வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் நடைபெறும் போதை பொருள், பாலியல் போன்ற சம்பவங்களுக்கு கார்ட்டூன் போடுங்கள்.
கள்ளச்சாராயம் அருந்தி 65 பேர் பலியாகி ஓராண்டு ஆகிவிட்டது. அதற்கு கார்ட்டூன் போடுங்கள். நீங்கள் நடத்தும் சாராய ஆலை குறித்து ஒரு கார்ட்டூன் போடுங்கள். முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடு செய்வதற்கு வெளிநாடு சென்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக பல்வேறு படங்களை வெளியிட்டுள்ளார் அது என்னவென்றால் வெளிநாட்டில் உள்ள ஹோட்டல்களில் பணியாற்றும் சர்வர்கள் உணவு மெனு கார்டுகளை வழங்கும்போது அதனை போட்டோ எடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் என தமிழக மக்களை ஏமாற்றிய நபர்கள் தான் இவர்கள் வெளிநாடுகளில் நட்சத்திர ஓட்டலில் பணியாற்றும் உணவு பரிமாறும் சர்வேர்கள் கோட் சூட் அணிந்து இருப்பார்கள் அவர்களிடம் மெனு காடுகள் வாங்கும் போது எடுத்த போட்டோவை தொழிலதிபர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று பேசுவது திமுகவினர் வேலைகள் இதனை டி ஆர் பி ராஜா கார்ட்டூன் ஆக போடலாமே எனவும் அமைச்சர் செல்லபாண்டியன் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். திமுக ஐடி விங், அமைச்சர் ராஜா, எடப்பாடியார் குறித்து வெளியிட்ட கேலிச்சித்திரத்தை உடனடியாக நீக்க வேண்டும் இதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் தவறும் பட்சத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி பெற்று அதிமுக மாநில வர்த்தக அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் தனது கண்டனத்தை தெரிவித்தார்.
அப்போது
மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் மில்லை ஆர் எல் ராஜா, முன்னாள் மாவட்ட மீனவர் அணி செயலாளர் அகஸ்டின்,
முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன்,
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சண்முகபுரம் பேதுரு ஆலயம் பெருமன்ற உறுப்பினர் பிரபாகர், முன்னாள் நகர் மன்றத் துணைத் தலைவர் ரத்தினம், முன்னாள் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல இணைச் செயலாளர் சங்கர், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், வட்டப்பிரதி ஐயப்பன், 30 வது வார்டு வட்டச் செயலாளர் ஜெகதீஸ்வரன், கனிராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.