*முருகப்பெருமானின் சூரசம்ஹார விழாவில் அரசியல் கோஷம் எழுப்பியது மிகவும் அநாகரீகமானது., இந்துக்களின் மனதை புண்படுத்திய பாடகர்கள் இருவர் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தூத்துக்குடி சீனிவாச சித்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.*
இதுகுறித்து, *தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ‘’சாக்தஸ்ரீ’’ சற்குரு சீனிவாச சித்தர் தமிழக முதல்வர் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோருக்கு கோரிக்கை மனு* அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் சூரசம்ஹார திருவிழா முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கடற்கரையில் காலகாலமாக மிகவும் ஆன்மிக சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த கந்தசஷ்டி திருவிழா எந்தவிதமான குறைகளும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இவ்விழாவினை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறைந்தபட்சம் இவ்விழாவில் சுமார் 7முதல் 10லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரை வந்து செல்கின்றனர்.
இப்படி சிறப்புமிக்க விழாவில், முழுக்க முழுக்க பக்திக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்விழாவில் எந்த கட்சியை சேர்ந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் அந்த அரசை யாரும் புகழ்ந்து துதி பாடுவதில்லை. அப்படியொரு தனிப்பட்ட அரசை இந்த விழாவில் புகழ்ந்து துதி பாடவேண்டும் என்ற அவசியமும் இல்லை.
ஆனால், முதல் முறையாக தவெக அரசு ஆட்சிக்கு வந்த பின்பு நடந்த சூரசம்ஹார விழாவில் உலகம் முழுவதும் வாழும் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் தனிப்பட்ட அரசியல் கோஷம் எழுப்பபட்டுள்ளது அநாகரீமான செயலாகும்.
கடவுள் முருகப்பெருமானை புகழ்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ‘’வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’’ என்று வான் அதிர கோஷமிட்ட நேரத்தில் விழாவினை வர்ணனை செய்த மேடை நாகரீகம் என்பது கொஞ்சம் கூட இல்லாத பாடகர்களான வேல்முருகன், புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் தமிழக முதல்வருக்கு அரோகரா., இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என கோஷம் எழுப்பியது மிகவும் கண்டிக்கதக்கதாகும்.
பொது மேடையில் வர்ணனை செய்வதற்கு தகுதியில்லாத பாடகர்கள் வேல்முருகன், புஷ்பவனம் குப்புசாமி இருவரும் இந்த தவெக அரசால் பயன் அடைகிறார்கள், அடைந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் தனிப்பட்ட முறையில் இவர்கள் இருவரும் தமிழகம் முழுவதும் கோயில் கோயிலாக அல்லது வீதி வீதியாக சென்று கோஷமிடட்டும்.
அதனை தவிர்த்து பக்தி உணர்வுமிக்க இந்துக்கள் கூடிய இந்துக்களுக்கான மிகப்பெரிய ஆன்மிக விழாவான சூரசம்ஹார விழாவில் வந்து அரசியல் கோஷமிட இவர்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை.
பாடகர்கள் மீது என்னைப்போன்று பல்வேறு இந்து அமைப்பினர் தெரிவித்து வரும் புகார்களுக்கு உரிய மதிப்பு அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
தனிப்பட்ட முறையில் அரசியல் கோஷமிட்ட இவர்கள் இருவரும் அனைத்து மக்களும் அறியும் வகையில் பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க்கவேண்டும்.
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் இந்துக்களின் மனதை புண்படுத்திய இந்த இருவர் மீதும் தமிழக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டப்படி எடுக்கப்படும் இந்த கடுமையான நடவடிக்கை இதுபோன்ற அறிவற்றவர்களின் செயல் இனிமேல் எந்த ஆன்மிக விழாவிலும் அரங்கேறிடாத வகையில் இருக்கவேண்டும்.
இந்துக்களுக்குரிய விழாக்களை இனியாவது இந்து சமய அறநிலையத்துறையானது அதன் மாண்பினை அறிந்து அதற்கேற்ப குறைகள் இல்லாமல் நடத்திடவேண்டும்-.
திருச்செந்தூர் கோயிலில் நிகழ்ந்து வரும் முறைகேடுகளுக்கு உடனடியாக தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அனைத்து பக்தர்களும் முருகனை கட்டணமின்றி துரிதமாக தரிசித்து செல்வதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும்.
இனியாவது இந்துக்கள் மீது எந்தவிதமான வன்மமும் காட்டாத வகையில், இந்துக்களின் மத வழிபாட்டு உரிமைகளை எக்காரணம் கொண்டும் தட்டி பறிக்காத வகையில் தமிழக அரசு கவனமாகவும், புரிதல் உணர்வுடனும் செயல்படவேண்டும் என்று இந்துக்கள் சார்பில் வலியுறுத்தி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
=============================