தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தெருப்பகுதிகள், மெயின் ரோட்டை ஒட்டியுள்ள பகுதிகள் என ஏற்கனவே தனியார் உதவியுடன் 30-க்கும் மேற்பட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மேயர் ஜெகன் பொியசாமி முயற்சியில் குறைவான உயரம் கொண்ட மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து மேலும் மாநகராட்சி பகுதியில் மக்கள் அதிகம் கூடும் 15 இடங்களை தேர்வு செய்து அந்த பகுதியிலும் உயரம் குறைவான மின் கோபுர விளக்குகள் அமைக்க ஒரு தனியார் நிறுவனத்தை மேயர் அணுகி அந்த நிறுவனம் மூலம் 15 குறைவான உயரம் கொண்ட மின் கோபுர விளக்கு அமைக்க ஏற்பாடு செய்தார். மக்கள் கூடும் இடங்கள், பிரதான சந்திப்புகளிலும் இந்த உயரம் குறைவான கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. சண்முகபுரம் கருப்பசாமி கோயில் முன்புறமும், போல்டன்புரம் சந்திப்பிலும் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்கினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறுகையில் வளா்ந்து வரும் மாநகராட்சி பகுதியில் பல புதிய குடியிருப்புகளும் உருவாகியுள்ளது. அதற்கேற்றாற் போல் மாநகராட்சி நிா்வாகமும் அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ஓன்றான மின்விளக்குகளும் தேவைக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மிகவும் உயரமான ஹைமாக்ஸ் லைட் பல இடங்களில் இரவை பகலாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குறைவான உயரம் கொண்ட ஹைமாக்ஸ் லைட்களும் மக்களின் கோாிக்கைக்கு ஏற்ப பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினாா்.
மாநகர தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கா், திமுக வட்ட செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் மற்றும் பலர் உடனிருந்தனர்.