தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகம் சார்பில் சாத்தான்குளத்தில் அமைந்துள்ள எவிஇ மாியா மெட்ாிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் சட்டத்தின் வலிமை என்ற தலைப்பில் மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்.
மேலும், சட்ட உரிமைகள் கழகத்தின் மாநில வழக்கறிஞர் அணி தலைவர் வக்கீல் சகாயராஜ், மற்றும் வக்கீல்கள் அந்தோணிபிச்சை, நாகராஜ், சின்னத்தம்பி ஆகியோரும் மாணவர்களிடையே சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பயனுள்ள கருத்துகளை எடுத்துரைத்தனர்.
சட்ட விழிப்புணர்வு முகாமிற்கான ஏற்பாடுகளை செய்த சட்ட உரிமைகள் கழகத்தின் மாநில வழக்கறிஞர் அணித் தலைவர் வக்கீல் சகாயராஜ்க்கும், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் சட்டஅறிவுடனும், சமூகப் பொறுப்புணர்வுடனும், தன்னம்பிக்கையுடனும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழகம் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனா்.