Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் வீரமா முனிவர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு கலெக்டா் விஷூமகாஜன். கருணாநிதி எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை 

Last updated: November 9, 2026 8:21 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமா முனிவர் 346வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு கலெக்டா் விஷுமகாஜன், கருணாநிதி எம்.எல்.ஏ முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ெதாிவிக்கையில் தேம்பாவணி என்னும் தமிழக் காப்பியத்தைப் படைத்து வழங்கியவர் வீரமாமுனிவர். இவர் இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவர். கிறித்தவ சமயத் தொண்டுக்காகத் தமிழகம் வந்து, தமிழின் சிறப்பினால் ஈரக்கப்பட்டு, தமிழ்த்தொண்டராகவும் தமிழறிஞராகவும் மாறிவிட்ட அவரது வாழ்வையும் பணியையும் பற்றிக் காண்போம். வீரமாமுனிவர் என்பது அவரது இயற்பெயர் அல்ல. கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பதே அவரது இயற்பெயர் கிறித்தவ சமயப் பணி செய்வதற்காக, அவர் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். கி.பி.1710இல் இந்தியாவுக்கு வந்தார். கோவா, கொச்சி, அம்பலக்காடு வழியாக, மதுரை மாவட்டத்தில் உள்ள காமநாயக்கன் பட்டியை வந்தடைந்தார். தமது சமயப்பணி தமிழ்நாட்டில் வெற்றி பெற வேண்டுமெனில், தமக்குத் தமிழறிவு மிகவும் இன்றியமையாதது என்று நன்குணர்ந்தார்.

மேலும், தமிழகம் வந்து தமிழராகவே மாறி, தம் பெயரையும் தத்துவ போதகர் என மாற்றிக் கொண்டு, தமிழ்ப்பணியும் புரிந்த இராபர்ட்-டி-நொபிலி என்னும் மேலைநாட்டு இறையடியாரைப் பற்றி இவர் கேள்விப்பட்டார். அவர் போலவே. தாமும் இறைப்பணியைச் செய்திட விரும்பினார். அதனால், இவரும் தமது பெயரைத் தைரியநாதர் என்று மாற்றிக் கொண்டார். பின்னாளில் மக்கள் இவரை வீரமாமுனிவர் என்றே அழைத்தனர். மதுரைத் தமிழ் சங்கத்தார் இப்பெயரை இவருக்குச் சூட்டினர் என்பர் சிலர். வீரமாமுனிவர் பெயர் மாற்றம் செய்து கொண்டதோடு, இந்நாட்டில் இருந்த சமயத் தொண்டர்களைப் போலவே, தாமும் நெற்றியில் சந்தனம் பூசி காதில் முத்துக்கடுக்கன் அணிந்து, காவி அங்கி உடுத்தி, புலித்தோல் பதிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டார். இப்படி தோற்ற மாற்றம் செய்துகொண்டது மட்டுமல்ல, காய்கறி உணவை மட்டுமே உண்டு. சைவ உணவினராகவும் மாறிவிட்டார். தமிழின் மீது இவருடைய பற்றை என்னென்பது தோற்றத்தில் மட்டுமின்றி, உணவு முறையிலும் மாறியது மேலும் சிறப்பானது.

இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டி மற்றும் ஏலாக்குறிச்சி, கோனான்குப்பம் முதலிய பல இடங்களில் சமயத் கொண்டு புரிந்தார். தாம் சமயப்பணி புரிந்த இடங்களிலேயே, பல்வேறு தமிழ் இலக்கிய இலக்கண நூல்களையும் அகராதிகளையும் எழுதி வெளியிட்டார். தமிழ் நாட்டுக்கு வந்து தமிழராகவே வாழ்ந்தார். வீரமாமுனிவர் 1747ம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே உயிர் நீத்தார். உலகில் வாழ்ந்த சமய மற்றும் மொழித்தொண்டர்கள் வரிசையிலே இவ்வாறு தமக்கென ஓர் அழியாத தனித்துவமான இடத்தைத் தேடிக் கொண்டார். பெஸ்கி எனப்பட்ட வீரமாமுனிவர் தத்தம் தாய்மொழியிலே புலவர்கள் பல்வேறு இலக்கியங்களைப் படைப்பது பொதுவழக்கு. தமது தாய்மொழி அல்லாத பிறமொழிகளை அறிஞர்கள் கற்று அதில் ஆழ்ந்த புலமை பெறுவதும் உலகில் காணக்கூடியதே. எனினும் ஒருவருக்குத் தம் தாய்மொழி அல்லாத பிறமொழியில் இலக்கியம், இலக்கணம். அகராதி முதலிய அனைத்துக் துறைகளிலும் அரிய நூல்கள் பல படைக்கும் அளவுக்கு ஆற்றலும் அரும் மிகமிக அரிய செயலாகும்.

செயற்கரிய அச்செயலைச் செய்து, உலக வரலாற்றிலேயே தனித்து நிற்பவருள் ஒருவராக வீரமாமுனிவர் திகழ்கிறார். புலமையும் அடைவது இத்தாலி நாட்டில் பிறந்து, தமது முப்பதாம் வயதிலேயே தமிழகம் வந்த அவர், தமிழில் சிற்றிலக்கியங்கள். இலக்கணம், உரைநடை, அகராதி, இசைப்பாடல்கள் முதலிய பல துறைகளில் நூல்கள் படைத்தார். அதோடு மட்டுமல்லாமல் இலக்கியப் படைப்புகளுள் மிக அரியதாகக் கருதப்படும் தேம்பாவணி எனப்படும் காப்பியம் ஒன்றையும் இயற்றி வெற்றி கண்டுள்ளார். மேலும், அவர்திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அநத்ரதி, கித்தேரியம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களையும், சதுரகராதி எனப்படும் அகராதியையும், தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலையும் எழுதியுள்ளார். இவற்றுள் தொன்னூல் விளக்கம், குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப்படும் பெருமையுடையது.

இப்படி பல்வேறு வகையான நால்களைப் படைத்த ஒரு புலவரைக் காண்பது, தமிழில் மட்டுமன்று உலகின் பிற மொழிகளிலும் கூட மிக அரிய ஒன்றாகும். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும் இரட்டை வழக்கு மொழியான தமிழில் பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும். கிருத்துவம் தமிழ் மொழிக்குச் செய்த சிறந்த சேவைகளில் ஒன்றாக அமைந்தது இந்த நூல் என்றால் மிகையாகாது. எனினும் இன்றைய கிருத்துவத் தமிழ் தனக்கென ஒரு வகை முறைமையை வகுத்துக் கொண்டு வழக்கில் இருக்கும் பேச்சுத் தமிழும் அல்லாத எழுத்துத்தமிழும் அல்லாத ஒரு வகைத் தமிழைக் கொண்டிருப்பது குறித்துக் கிருத்துவ நிறுவனங்கள் மறுமதிப்படு செய்தல் கிருத்துவத்துக்கும் தமிழுக்கும் நலன் பயக்கும் என்பது எனது கருத்து.

திருக்குறளில் அறத்தையும் பொருளையும் லத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர். இதில் பரமார்த்த குரு கதையானது தமிழில் முதல் முதலாக வந்த ஹாஸ்ய இலக்கியம் என்பதைச் சொல்லத்தானாக வேண்டும்.

நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பணராஜவேல், கயத்தார் வட்டாட்சியர் அப்பனசாமி உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி பத்திரிக்கையாளர்களின் மானிய விலையில் வீட்டுமனை கோரிக்கை நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் கால் நூற்றாண்டுகளாக பத்திரிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.
Next Article தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் நடத்தப்படும் குழந்தைகள் தின விழாவில் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு சமூக ஆா்வலா்கள் குற்றச்சாட்டு 

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தெப்பகுளத்தில் திடீரென ஏற்பட்ட விரிசலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பார்வையிட்டார்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

சிறுமிகள், பெண்களுக்கு ஏதிரான பாலியல் குற்றங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி செய்தியாளர்களின் தாய் 4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினார்கள்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

2025– 2026ம் ஆண்டிற்கான தேசிய பெண் குழந்தை தின மாநில அரசு விருது– திருநெல்வேலி மாணவி சூடாமணிக்கு அமைச்சா் கீதாஜீவன் வழங்கினாா்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?