
தூத்துக்குடி, அக். 30:
தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த தெய்வீகத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் நிறுவனத் தலைவர் SP மாரியப்பன் நாடார் தலைமை தாங்கி, தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் J. சாமுவேல் ராஜ், கழகத் தலைவர் புஷ்பராஜா, பாண்டியனார் மக்கள் இயக்கத்தின் MM. டேவிட், வணிகர் சங்கத் தலைவர் பெத்துராஜ் மற்றும் குமார், ராஜபாண்டி, பாலாஜி, PK. மாரிமுத்து, P. பொன்னம்பலம், K. மோகன்ராம், கிறிஸ்டோபர், சரவணகுமார், வின்சென்ட் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.