தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா குறுக்குசாலை கே வேலாயுதபுரத்தில் வசிக்கும் மூதாட்டி குமாரபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மூதாட்டி ஞான செல்வி தனது மகன் ராமமூர்த்தி உடன் சென்று தனது இடத்திற்கு பட்டா வேண்டும் என கேட்க சென்றுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் தடி கண்ணன் என்பவர் அந்த இடத்திற்கு உங்களுக்கு பட்டா தர முடியாது என்று கூறியுள்ளார். செல்வக்கண்ணன் பணம் கொடுத்தார் அவருக்கு நான் குத்தகைக்கு கொடுத்துள்ளேன். உன் பட்டாவை ரத்து பண்ணவும் முடியாது. உனக்கு பட்டா கொடுக்கவும் முடியாது. அப்படி தரும் பட்சத்தில் ரூபாய் 1,00,000 தர வேண்டும் என கூறியுள்ளார். அதை கேட்டவுடன் மூதாட்டி மன உளைச்சலில் வீட்டிற்கு வந்த பின்பு மன அழுத்தம் அதிகமாகி மயங்கி விழுந்து விட்டார். உடனே பதறி அடித்து மூதாட்டியை ஓட்டப்பிடாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சரியான சிகிச்சை அளிக்காததால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தடி கண்ணன் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மூதாட்டியின் மகன் கூறினார்.
சட்டஉாிமைகள் கழக நிறுவனா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கூறுகையில் அரசு அதிகாாிகள் தங்களுக்கு ஓதுக்கப்பட்ட பதவிகளில் நோ்மையாகவும் முறையாகவும் செயல்பட வேண்டும் விதிகளை மீறி செய்யும்செயல்களால் பல்ேவறு தரப்பினா் பாதிக்கப்படும் நிலை வருகிறது இந்த வகையில் மூதாட்டி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளாா். மாவட்ட கலெக்டா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினாா்