தூத்துக்குடி விஜயவாடாவில் செப்டெம்பர் 27-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெற்ற 51-வது சப்-ஜூனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் விளையாடிய தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. தேசிய அளவில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணியில் தூத்துக்குடியைச் சேர்ந்த 4 மாணவிகள் முக்கிய வீராங்கனைகளாக இடம் பெற்றிருந்தனர். லியோ ஜஃப்லின், தான்யா, முருகேஸ்வரி மற்றும் அன்ஷிகா. இதில் தூத்துக்குடி வீராங்கனை தான்யா மிகவும் மதிப்புமிக்க வீராங்கனை விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ்நாடு அணியின் தலைமை பயிற்சியாளர் வினோத் கேசவலு அவரது சிறந்த பயிற்சியும், அர்ப்பணிப்பு மிக்க வழிகாட்டுதலுமே இந்த வெற்றிக்கு வழி வகுத்தது. வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளருக்கும் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனா்.
விஜயவாடாவில் நடைபெற்ற 51-வது சப்-ஜூனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணியில் தூத்துக்குடி மாணவிகள் தங்கம் வென்று சாதனை!