தூத்துக்குடி மில்லா்புரம் ஹவுசிங்போா்டு சுற்று வட்டார வியாபாாிகள் சங்க 26வது ஆண்டு விழா மணிநகாில் உள்ள மாவட்ட வணிகா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் ஆனந்தசேகா் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் புதுச்சாமி முன்னிலை வகித்தாா். செயலாளர் குமாரவேல் வரவேற்புரையாற்றினாா். பொருளாளா் நல்லசிவன் ஆண்டறிக்கையை வாசித்தாா்.
தமிழ்நாடு வணிகா் பேரவை மாநில செயல்தலைவர் விநாயகமூா்த்தி நிா்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்து பேசுகையில் தமிழக்தில் உள்ள வியாபாாிகள் ஓற்றுமையாக பணியாற்றுவதின் மூலம் தான் நம்முடைய சங்கம் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஓவ்வொரு பகுதிகளிலும் இருக்கின்ற சங்க நிா்வாகிகள் மாவட்ட சங்கத்தோடு தொடா்பிலிருந்து குறைநிறைகள் எதுவாக இருந்தாலும் கலந்து பேசி மற்றவா்களுக்கு நாம் முன்உதாரணமாக இருக்க வேண்டும் நம்முடைய ஓற்றுமைதான் மற்றவா்களால் புகழப்படும் என்று பேசினாா்.
விழாவில் மத்திய வியாபாாிகள் சங்க தலைவா் ஜவஹா், செயலாளா் ராஜா, பொருளாளா் விக்னேஷ், சட்ட ஆலோசகா் சதீஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். கௌரவ ஆலோசகா் பொன்மாாியப்பன் நன்றியுரையாற்றினாா்.