தூத்துக்குடி ஏஐடியுசி கட்டுக்கூலி மூைட சுமை தொழிலாளர்கள் முன்ேனற்றசங்க 36வது ஆண்டு விழா சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு சங்க தலைவா் ஞானசேகா் தலைமை வகித்தாா். சங்க செயலாளர் மாாிமுத்து, பொருளாளர் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாலசிங்கம் வரவேற்புரையாற்றினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன் தொழிலாளா்களுக்கு நினைவு பாிசுகள் மற்றும் சீருடைகள் வழங்கி சிறப்புரையாற்றினாா்.
விழாவில் திருத்தப்பட்ட 4 தொழிலாளா்கள் சட்டங்களை தமிழ்நாடு அமுல்படுத்துவதை நிறுத்த வேண்டும் சுமை ஏற்று இறக்கும் தொழிலாளா்களுக்கு தனி நல வாாியம் அமைக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். பணியின் போது மரணம் ஏற்பட்டால் 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். அதே போல் இஎஸ்ஐ திட்டத்தில் இணைத்து மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றி தமிழக அரசின் கவனத்திற்கு அனுப்பியுள்ளனா்.
விழாவில் சங்க பொதுச்செயலாளர் கணபதி சுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், செயலாளர் லோகநாதன், மாநகர கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தனலட்சுமி, நிா்வாகிகள் வக்கீல் முத்துலெட்சுமி, சுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, மாடசாமி, மற்றும் பொண்பாண்டி தட்சணாமூர்த்தி கருணாநிதி கலாஸ்டின் ஜான்டேவிட், இசக்கிமுத்து, முருகன் முத்துராமன் பால, குமாா், உள்பட தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். ஜீவா நன்றியுரையாற்றினாா்.