தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் ‘லுமோரா ’26’ என்ற தலைப்பில் நுண்கலை விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரிச் செயலாளர் பாத்திமா லூயிஸ், முதல்வர் முனைவர் ரூபா துணை முதல்வர் முனைவர் மதுரவள்ளி ஆகியோர் முன்னிலையில். விஜயலக்ஷ்மி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவிகள் பரதநாட்டியம், தனிநபர் பாடல், தனிநபர் நடனம், குழு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
விழாவில் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனா்.