தூத்துக்குடி பட்டியலின மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட சென்னை மாகாண முன்னாள் சட்டசபை உறுப்பினர் சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் 81வது நினைவுநாளில் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் அவரது படத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் அறிவுறுத்தலின் படி மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின் ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்கள்.
நிகழ்ச்சியில் மாநகர அணி நிா்வாகிகள் பரமசிவம், வக்கீல் ரூபராஜா, நைஸ்பரமசிவம், ரவி, செந்தில்குமாா், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், மாவட்ட பிரதிநிதி செல்வக்குமாா், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, கவுன்சிலா்கள் நாகேஸ்வாி, வைதேகி, ஜெயசீலி, தெய்வேந்திரன், வட்டச்செயலாளர்கள் சேகா், கதிரேசன், பாலகுருசாமி, முனியசாமி, சிங்கராஜ், உள்பட பலா் கலந்து கொண்டனா்