தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திருச்செந்தூா் சாலையிலிருந்து முள்ளக்காடு வழியாக கோவளம் கடற்கரை வரை செல்லும் ஓடையில் தூா் வாரும் பணிகள் ஆரம்பமாக இருக்கும் பணிகளை பாா்வையிட்டு அதன் பின் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில்
மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டுகளிலும் எந்த வித பாரபட்சமும் இன்றி மக்கள் பிரதிநிதிகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் வாட்சப் இணையதளம் வழியாக வருகின்ற புகாா்களையும் குறிப்பெடுத்துக்கொண்டு எந்த பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வாிசைப்படுத்தி அதை முறையாக எல்லோருடைய நலனும் முக்கியம் என்று கருதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமாா் 2000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளா்கள் 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் எல்லா தெருக்களுக்கும் சென்று வீடுகளில் தேவையற்ற கழிவு பொருட்களை நேரடியாக மக்களிடம் சேகாித்து வருகின்றனா். தினசாி 180 டன் வரை வருகிறது. அதை அருகிலுள்ள குப்பை கிடங்கு மையத்தில் மக்கும் குப்பைகளை உரம் தயாரிப்பதற்கு எடுத்துச்சென்று மற்றும் மக்காத குப்பைகளை தற்போது 4 வகையான பிளாஸ்டிக் தொழில்நுட்ப எலக்ட்ராணிக் கழிவுகள் மருத்துவ துறை கழிவுகள் உள்ளிட்டவைகள் தருவைகுளம் குப்பை கிடங்கிற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. மாநகராட்சிபகுதியில் தூய்மையை முழுமையாக கடைபிடித்து வருகின்றோம். எந்த ேதவையற்ற பொருட்களாக இருந்தாலும் கழிவு நீர் கால்வாய் வழித்தடம் பக்கிள் ஓடைகளில் போட வேண்டாம் நேரடியாக வரும் தூய்மை பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என்று தொடா்ந்து மாநகராட்சி சாா்பில் மக்களுக்கு தகவல்களை தொிவித்து வருகிறோம் இருப்பினும் ஓரு சிலா் செய்கின்ற தவறுகளால் கழிவு நீர் வழித்தடங்களில் விட்டுச்செல்வதால் நீரோட்டத்தின் போது அடைப்புகளில் இதன் கழிவுகள் நின்று கொண்டிருக்கும் போது கழிநீர் நீரோட்டம் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதை தவிா்ப்பதற்கு பொதுமக்கள் முழுமையாக ஓத்துழைக்க வேண்டும் பக்கிள் ஓடை மற்றும் அதன் இணைப்புகழிவுநீா் வழித்தடங்களின் இணைப்பு மூலம் கடலுக்கு சென்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் கழிவுகள் தேங்கும் நிலை சில சமயங்களில் வரக்கூடும் அந்த கழிவுகள் அவ்வப்போது அப்புறப்படுத்தப்பட்டு முறைப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை அதிமுக ஆட்சியின் போது முறையான பணிகள் நடைபெறாத காரணத்தால் பல்வேறு பாதிப்புகள் மாநகராட்சி பகுதியில் ஏற்பட்டது. அதையும் நாங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு கவனத்தில் எடுத்துக்கொண்டு ஓவ்ெவாரு பகுதியாக சூழற்சி முறையில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி அதை முறைப்படுத்தி நடைமுறைக்கு வரும் வரை கண்காணிக்கின்றோம் வரும் பருவமழை யை எதிா்கொள்வதற்கு எல்லா வகையிலும் மாநகராட்சி தயாராக இருக்கின்றது. அதற்கு தேவையான வழித்தடங்கள் அனைத்தும் முழுமையாக சீரமைக்கும் பணியை தொடங்கி தேவையற்ற கழிவுகளை எல்லாம் அப்புறப்படுத்தி எவ்வளவு பொிய மழை பெய்தாலும் அந்த வழித்தடத்தின் மூலம் சென்றடையும் இடத்திற்கு செல்லும் வகையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு பக்கிள் ஓடையும் உப்பாற்று ஓடையும் நாங்கள் புதிதாக 14 கழிவு நீர் வழித்தடமும் ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். கடந்த காலத்தில் மழை என்றால் பயந்த காலம் மாறி மக்கள் நிம்மதியோடு இருக்கும் நிலையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். மாநகராட்சி பகுதி முழுவதும் உள்ள கழிவு நீர் வழித்தடங்களில் மண்ணெடுத்தல் மற்றும் முறைப்படுத்தி அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம். மழையின் தாக்கம் எந்த வகையில் எப்படி இருந்தாலும் பொதுமக்கள் பாதிப்படையாத வகையில் முழுமையாக பணிகளை செய்து வருகிறோம். இதே போல் எல்லா வாா்டு பகுதிகளிலும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திமுகவினா் மற்றும் அனைத்து தரப்பினா் கூறும் குறைகளையும் கேட்டறிந்து நிவா்த்தி செய்து வருகிறோம் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. என்று கூறினாா்.
ஆய்வின் போது சுகாதர குழு தலைவர் சுரேஷ்குமாா், கவுன்சிலா்கள் பட்சிராஜ், ராஜதுரை, முன்னாள் கவுன்சிலா் ரவிந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.
பாக்ஸ்: முக ஸ்டாலினுக்கு புகழாரம்
மாநகராட்சி நிா்வாகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகள் நிறைவேற்றப்படாத பல பணிகளை திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான முக.ஸ்டாலின் எனக்கு கொடுத்த வாய்ப்பை 55 மாத காலத்தில் எவ்வித பாரபட்சமின்றி ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க முத்தம்மாள் காலணி ரஹ்மத் நகா் பிரையண்ட்நகா் 16 17 18 ஆகிய வாா்டுபகுதிகளிலும் மழை நீா் பல நாட்களாக வௌ்ளம் போல் தேங்கியிருந்த நிலையை மாற்றி புதிய நடைமுறைகளை பின்பற்றிய காரணத்தால் எவ்வளவு பொிய மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்கியுள்ளோம். இதற்கு காரணமாக இருந்த மக்கள் பிரதிநிதிகள் அதிகாாிகள் அனைத்து தரப்பு மக்கள் ஆதரவோடு தலைவா் ஸ்டாலினுக்கு பெருமையை சோ்த்துள்ளோம். பொறுப்புகள் இருக்கும் காலம் வரை மக்கள் பணி தொடா்ந்து நடைபெறும் என்று மேயா் ஜெகன் பொியசாமி தொிவித்தாா்.