தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகரில் உள்ள பொது சுவர்களில் அழகிய சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ் கலாச்சாரம், தூத்துக்குடி மக்களின் வாழ்வியல், கடல் வாழ் உயிரினங்கள், தூய்மை விழிப்புணர்வு ஆகிய கருத்துக்களை உள்ளடக்கிய ஓவியங்கள் வரையப்படுகின்றன. பொதுமக்கள் அனைவரும் பொது சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்க்கவும் நகர அழகுபடுத்தும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கவும் சுவர் ஓவியங்களை சேதப்படுத்துவோர் குறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கவும் இப்பணிக்கு ஆதரவளிக்க விரும்பும் தன்னார்வலர்கள், பொதுமக்கள், கொடையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் ப்ாியங்காவை தொடர்பு கொள்ளலாம் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனா்.
தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டம் பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு ஆணையா் ப்ாியங்கா வேண்டுகோள்