தூத்துக்குடி ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சில்வர்புரத்தில் மாவட்ட பிரபு மன்ற தலைவர் குமாரமுருகேசன் தலைமையில் ஐஎன்டியுசி மாநில செயலாளர் ராஜ், 1வது வார்டு காங்கிரஸ் தலைவர் வேல்குமார், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கலை பிரிவு தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சண்முகம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி சோலையப்பராஜா, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், ஐஎன்டியுசி சுப்பிரமணியன், ராஜா, வார்டு தலைவர் தாமஸ், வார்டு செயலாளர் சின்ன ராஜா, இளைஞர் காங்கிரஸ் ரென்னீஸ் பாபு, முத்துராஜ், ரமேஷ் சந்தனசதீஷ், சங்கர் கணேஷ், அரசகுமார், சதீஷ், மோகன், வருண், மனோகரன், சவரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.