தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் ஆடி மாத வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீவாராஹி அம்மனுக்கு பால், பன்னீர், தேன் சந்தனம், உள்ளிட்ட அபிஷேகமும், தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.
உலகில் அன்பு, அமைதி நிலவவேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்திடவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகி கொழித் திட வேண்டி ஸ்ரீவாராஹி அம்மனுக்கு மஹா யாக சிறப்பு வழிபாடுகள் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.