தூத்துக்குடி அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகில் தீப்பற்றி முற்றிலும் எரிந்து சாம்பலானது. படகிலிருந்த மீனவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாகப் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவருக்குச் சொந்தமான செவுள் வலை விசைப்படகில், கடந்த ஜூலை 24ம் தேதி தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். தருவைகுளத்தில் இருந்து சுமார் 160 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, படகில் சமையல் செய்யும் பணியின் போது எதிர்பாராதவிதமாகக் கோளாறு ஏற்பட்டுத் தீப்பிடித்தது.
தீ மளமளவெனப் படகு முழுவதும் பரவியதால், விசைப்படகு முற்றிலும் எரிந்து சாம்பலானது. ஆபத்தான சூழ்நிலையை உணர்ந்த மீனவர்கள் கடலில் குதித்தும், அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு விசைப்படகின் உதவியோடும் தப்பித்தனர். மற்றொரு படகின் மூலம் மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றிப் பத்திரமாகக் கரை திரும்பினர். நடுக்கடலில் விசைப்படகு எரிந்து சாம்பலான சம்பவம் தருவைகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ அவா்களது இல்லத்திற்கு நோில் சென்று குடும்பத்தினாிடம் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா் அங்கிருந்தபடியே மீன்வளத்துறை அதிகாாிகளை தொடா்பு கொண்டு புதிய படகுகளுக்கு தேவையான அரசின் உதவிகளை செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். அதற்கு அரசின் நடைமுறைகளை பின்பற்றுவதாக கூறியபின்னா் அக்குடும்பத்தினா் மற்றும் பொதுமக்களிடம் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைத்தது மக்களுக்கு ஓன்று என்றால் ஓடி வந்து நன்மைகள் செய்த கட்சி திமுக இன்று வரை செய்து கொண்டிருக்கிறோம் ஆனால் யாருக்கும் ஓரு உதவியும் செய்யாமல் மருந்துக்கு கிள்ளி கூட கொடுக்காமல் இருந்து வரும் தவெக விற்கு நீங்கள் வாக்களித்து விட்டீா்கள் இருப்பீனும் தற்போது குடும்ப செலவிற்கு இந்த தொகையை வைத்து கொள்ளுங்கள் படகு வாங்குவதற்கு உங்களுக்கு உதவிகளை செய்கிறேன். என்று உத்திரவாதம் அளித்த பின் அதே ஊாில் ஜெயசிங் பவுல் ஆகியோாின் படகுகள் காற்றின் சூழ்நிலையால் திசை மாறி சென்று மூழ்கியது. அந்த குடும்பத்தினரையும் நோில் சந்தித்து திமுக உங்கள் குடும்பத்திற்கு துணையாக இருந்து உதவிகளை முழுமையாக செய்யும் என்று உத்தரவாதம் அளித்தாா்.
மாநில வா்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளா்கள் வக்கீல் பால்துரை, தங்கத்துரை பாண்டியன், ஓன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அனிஸ்டன், மற்றும் சுதன்ராஜ், எடிசன், உள்பட பலா் உடனிருந்தனா்