தூத்துக்குடியில் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் யின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற (22.06.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணி அளவில் தூத்துக்குடி பெல் ஹோட்டல் அருகில் வைத்து மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டியானது 8 கிலோமீட்டர் இந்த போட்டியில் 18 வயது நிரம்பிய ஆண்கள் மட்டும் பங்கு பெறலாம். அதுபோல 5 கிலோமீட்டர் இந்த போட்டியில் 18 வயது நிரம்பிய பெண்கள் மட்டும் பங்கு பெறலாம். இந்த போட்டி பெல் ஹோட்டலி தொடங்கி பீச் ரயில்வே டிரக் ரவுண்டானா வழியாக மீண்டும் பெல் ஹோட்டலில் நிறைவு பெறுகிறது.
இந்த மாரத்தான் ஆண்கள் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. முதல் பரிசுத் தொகை 15,000 ம் இரண்டாவது பரிசுத் தொகை 10,000 ம் மூன்றாவது பரிசுத் தொகை 5000 ம், என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மராத்தான் பெண்கள் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. முதல் பரிசுத் தொகை 10,000 ம், இரண்டாவது பரிசுத் தொகை 7,000ம், மூன்றாவது பரிசுத் தொகை 3,000 ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய நபர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு தொடர்புக்கு வாட்ஸ் அப் எண் :- 9944022151 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் டீ சர்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். என்று தவெக மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்