தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக காலை விளாத்திகுளத்தில் கைது செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சுமார் 6 மணி நேரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில்
திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை பார்ப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, எம்.எல்.ஏக்கள் அப்துல்வகாப், கருணாநிதி உள்ளிட்டோரை மாவட்ட காவல்துறையினர் அவரை சந்திக்க விடாமல் தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தினர் காரணமாக காவல்துறையினர் மற்றும் திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது தள்ளுமுள்ளு ஏற்பட்டது மேலும் காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பகுதியில் இருந்து திமுகவினரை அப்புறப்படுத்தும் பணிகள் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி திருநெல்வேல் நெடுஞ்சாலையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட கருணாநிதி எம்.எல்.ஏ, துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, வழக்கறிஞா் அணி அமைப்பாளர் குபோ் இளம்பாிதி, மாணவா் அணி அமைப்பாளர் சீனிவாசன், மகளிா் அணி அமைப்பாளா் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், அருணாதேவி, மாநகர வழக்கறிஞா் அணி துணை அமைப்பாளா் ரூபராஜா, இலக்கிய அணி துணை அமைப்பாளா் கல்யாணசுந்தரம், தலைமை பேச்சாளா் சரத்பாலா, பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூாிதங்கம், மாவட்ட பிரதிநிதிகள் சோ்மபாண்டியன், செல்வக்குமாா், ஓன்றிய செயலாளர்கள் சின்னப்பாண்டியன், சின்னமாாிமுத்து, இம்மானுவேல், ராமசுப்பு, முருகேசன், காசிவிஸ்வநாதன், நவநீதகண்ணன், ராதாகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிா்மல்ராஜ், ஜெயக்குமாா், ராமகிருஷ்ணன், மேகநாதன், கவுன்சிலா்கள் வைதேகி, நாகேஸ்வாி, பவாணி, ஜான்சிராணி, அந்தோணிபிரகாஷ் மாா்ஷலின், உள்பட 250 போ் கைது செய்யப்பட்டு மடத்தூாில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். அங்கு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது