தூத்துக்குடி மாநகராட்சி மையப்பகுதியில் மழை வெள்ள காலத்தில் மழை நீர் செல்வதற்காக பக்கிள் ஓடை 2023ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை ஆய்வு செய்த அப்போதைய திமுக அரசு பக்கிள் ஓடை விரிவாக்கம் செய்ய சுமார் 53 கோடி 73லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பக்கிள் ஓடை பணிகள் 20 சதவீதம் கூட நிறைவு பெறாத நிலையில் மாநகராட்சி ஆணையர் 2 மாத காலத்தில் பணிகள் முடிவடைந்து விடும் என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து வக்கீல் ராஜசேகர் கூறுகையில் 2016ல் ஏற்பட்ட மழை வெள்ளம் ஓட்டப்பிடாரம் கயத்தாறு உள்ளிட்ட பலபகுதியில் இருந்து காட்டாற்று வெள்ளப்பெருக்கு நீர்நிலை தடங்கள் ஆக்கிரமிப்பு இருந்ததால் வெள்ளப்பெருக்கு தூத்துக்குடி மாநகரத்துக்குள் வந்தது. வெள்ளப்பெருக்கை தடுப்பதற்காக தான் பக்கிள் ஓடை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் 32 மீட்டர் ஆக பக்கிள் ஓடை இருந்தது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அது 26 மீட்டர் ஆக குறைந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட கடும் மழைவெள்ளத்தை கருத்தில் கொண்டு கூடுதலாக ஆறு மீட்டர் பக்கிள் ஓடை விரிவாக்கம் நடைபெறுகிறது டெண்டர் விடப்பட்டு எப் சி ஐ குடோனில் இருந்து திரேஸ்புரம் கடற்கரை வரை ஏழு கிலோ மீட்டர் தூரம் பக்கிள் ஓடை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது அந்த வழித்தடங்களில் மின்கம்பங்கள் 380 மாற்றப்பட வேண்டும் 16 ட்ரான்ஸ்பர்கள் மாற்றப்பட வேண்டும் அதுபோல குடிநீர் மெயின் பைப்லைன் மாற்றம் செய்யப்பட உள்ளது அதிகாரிகள் தற்போது இருக்கிற தமிழக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் நிர்வாகத்தின் அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும் அப்போதுதான் அதுமக்களுக்கு பயன் உள்ளதாக நன்றாக இருக்கும். தூத்துக்குடி மாநகராட்சி பொருளாதார வளர்ச்சி இருக்கும் பல்வேறு தொழிற்சாலைகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது அதிகாரிகள் உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுக்க முடியும். இந்தப் பக்கிள் ஓடை இரண்டு மாத காலத்தில் பணிகள் முடிவடைந்து விடும் என்று அறிக்கை கொடுத்துள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் பணிகள் முடிவடையும் என்று ஒப்பந்ததாரர் கூறுகிறார். பணிகள் தரமானதாக இருக்க வேண்டும். முத்தம்மாள் காலனி பகுதியில் இருந்து ஒரு ஓடை எட்டையாபுரம் ரோடு இசக்கி அம்மன் கோவில் அருகில் ஒரு ஓடை உள்ளது அந்த ஓடை தூர் வாராமல் சரியான பராமரிப்பு இல்லாமல் ஆக்கிரமிப்பில் உள்ளது அதனை அகற்றி சரி செய்ய வேண்டும் மாநகராட்சி ஆணையர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதுபோல மாநகராட்சி பகுதியில் உள்ள சி.வ.குளம் செல்லக்கூடிய கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது இரண்டு மாத காலத்தில் முடிவடையாத பக்கிள் ஓடை முடிவடையும் என்று கூறியது சாத்தியமில்லாதது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு வேண்டியவர்களாகவும் சாதகமானவர்களாகவும் அதிகாரிகள் செயல்படக்கூடாது வருகின்ற காலத்தில் மாநகராட்சி மக்கள் வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க அனைத்து பணிகளையும் மாநகராட்சி ஆணையர் செய்ய வேண்டும். அதுபோல ஆணையர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் பக்கிள் ஓடை மேலே மூடி போட்டு சாலை அமைத்து அழகு படுத்த வேண்டும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநகராட்சி ஆணையர் தமிழக அரசுக்கு ஆதரவாக இல்லாமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் இணைந்து ஆணையர் செயல்பட வேண்டுமென்று வக்கீல் ராஜசேகர் கூறியுள்ளார்.